»   »  தயாரிப்பாளர்களே, இனியாவது ஸ்ருதி வீட்டு வாசலில் போய் பிச்சை எடுக்காதீங்க: ட்வீட்டிய நடிகர்

தயாரிப்பாளர்களே, இனியாவது ஸ்ருதி வீட்டு வாசலில் போய் பிச்சை எடுக்காதீங்க: ட்வீட்டிய நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
விக்ரம் மகனுடன் சேரப்போவது கமல் மகளா?-வீடியோ

பெங்களூர்: தயாரிப்பாளர்கள் ஸ்ருதி ஹாஸன் வீட்டு வாசலில் நின்று இனியாவது பிச்சை எடுக்க வேண்டாம் என கன்னட நடிகர் ஜக்கேஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

த்ருவா சார்ஜா நடிக்கும் புதிய கன்னட படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. இதை பார்த்த ஸ்ருதி ஹாஸன் கன்னட படத்தில் நடிக்கும் திட்டம் இல்லை என்று ட்விட்டரில் விளக்கம் அளித்தார்.

அவரின் ட்வீட்டை பார்த்த கன்னட ரசிகர்கள் அவரை விளாசித் தள்ளினர்.

ஹீரோயின்கள்

ஹீரோயின்கள்

கர்நாடகாவில் ஏராளமான திறமையான, அழகான ஹீரோயின்கள் இருக்கிறார்கள். நீங்கள் தேவையில்லை என்று ஸ்ருதி ஹாஸனை கன்னட ரசிகர்கள் விளாசியுள்ளனர்.

தயாரிப்பாளர்கள்

கர்நாடகாவில் நிறைய நடிகைகள் உள்ளனர். இதற்கு பிறகும் தயாரிப்பாளர்கள் ஸ்ருதி வீட்டு வாசலில் போய் பிச்சை எடுக்கக் கூடாது. ஆனால் இந்த தயாரிப்பாளர்கள் திருந்த மாட்டார்கள் என்று கன்னட நடிகர் ஜக்கேஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஸ்ருதி ஹாஸன்

ஸ்ருதி ஹாஸனை விட கர்நாடக கல்லூரி மாணவிகள் அழகாக உள்ளனர். ஸ்ருதியை மேக்கப் இல்லாமல் பார்த்தால் அனைவரும் தெறித்து ஓடிவிடுவார்கள் என்று ஜக்கேஷ் ட்வீட்டியுள்ளார்.

தமிழ் ரசிகர்கள்

தமிழ் ரசிகர்கள்

கன்னட படத்தில் நடிக்க மாட்டேன் என்று ஸ்ருதி ஹாஸன் தெரிவித்தது ஒரு குற்றமா. எந்த படத்தில் நடிக்க வேண்டும் என்பது அவர் விருப்பம் என்று தமிழ் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Kannada actor Jaggesh blasted Shruti Haasan and asked Sandalwood producers to stay away from her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil