Kantara Chapter 1 Day 2 Collection Prediction: இரண்டாவது நாளிலும் வசூலில் அடித்து ஆடும் காந்தாரா..

சென்னை: ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கி, நாயகனாக நடித்த 'காந்தாரா: சாப்டர் 1' திரைப்படம் முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸில் அமோக வசூலைக் குவித்தது. 2022-ல் வெளிவந்த 'காந்தாரா' படத்தின் ப்ரீகுவம் கதையான இது, நேற்று அதாவது அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது நாள் வசூல் கணிப்பு குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

ஆயுதபூஜை மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய இரண்டு முக்கிய விடுமுறை தினங்களில் வெளியானதால், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸ் டிராக்கிங் தளமான சாக்னில்க்-ன் ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி, இத்திரைப்படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் சுமார் ₹60 கோடி நிகர வசூலை ஈட்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் படக்குழு இன்னும் முதல் நாளின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்து எதுவும் கூறவில்லை.

Kantara Chapter 1 Box Office Collection Day 2 Early Prediction Movie Reached 100 Crores Club

சாக் நிக் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள வசூல் விவரங்களை பொறுத்தவரை, கர்நாடகாவில் ₹18 கோடியும், தெலுங்கில் ₹12.5 கோடியும், இந்தியில் ₹19.5 கோடியும், தமிழில் ₹5.25 கோடியும், மலையாளத்தில் ₹4.75 கோடியும் ஈட்டியுள்ளது என்று உள்ளது. ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ள 'காந்தாரா: சாப்டர் 1' படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் மற்றும் சலுவே கௌடா தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் பண்டைய கால புராணக் கதைகள் மற்றும் வாய்மொழி கதைகளில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

கதை: கடம்ப வம்சத்தின் பின்னணியில் அமைந்த இந்த கதை, ஒரு வன சமூகத்தையும், வெளியுலக அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் அவர்களின் போராட்டங்களையும், நிலத்தோடு அவர்களைப் பிணைக்கும் ஆன்மீகக் கூறுகளையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. ரிஷப் ஷெட்டியுடன், கனகவதியாக ருக்மிணி வசந்த், குலசேகராவாக குல்ஷன் தேவைய்யா மற்றும் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அரவிந்த் எஸ். காஷ்யப் ஒளிப்பதிவு செய்ய, பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

Kantara Chapter 1 Box Office Collection Day 2 Early Prediction Movie Reached 100 Crores Club

ரசிகர்கள் வரவேற்பு: பெரிய பட்ஜெட் வரலாற்று படங்கள், குறிப்பாக பல மொழிகளில், இந்திய சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நேரத்தில் இத்திரைப்படம் வெளியாகியுள்ளது. 'காந்தாரா: சாப்டர் 1' இந்த ஆண்டின் முக்கிய இந்திய படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. விடுமுறை தினங்களில் கிடைத்த வலுவான வரவேற்பை தொடர்ந்து, வரும் வார இறுதியில் இதன் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் என்பது இத்திரைப்படத்தின் தொடக்க வெற்றியை எப்படி நிலைநிறுத்தும் என்பதை முடிவு செய்யும்.

இரண்டாவது நாள் வசூல்: படம் முதல் நாளில் இந்தியாவில் ரூபாய் 60 கோடிகள் வசூலித்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது நாள் வசூல் எந்த அளவுக்கு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு உள்ளது. முதல் நாளை காட்டிலும் இரண்டாவது நாள் கொஞ்சம் குறைவான வசூல் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் படம் இரண்டாவது நாளில் கிட்டத்தட்ட ரூபாய் 25 கோடிகள் முதல் ரூபாய் 30 கோடிகள் வரை வசூலிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் வெளிநாட்டு வசூல்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. படம் முதல் நாளே 100 கோடிகள் கிளப்பில் இணைந்திருக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் இரண்டாவது நாளிலேயே 100 கோடிகள் கிளப்பில் இணைந்து இருக்கும் என்ற பேச்சும் உலா வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X