twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'நதிகள் நனைவதில்லை'.. குமரி மாவட்ட காதல் கதை

    By Mayura Akilan
    |

    வைகுண்டா சினி பிலிம்ஸ் சார்பில் நாஞ்சில் பி.சி. அன்பழகன் தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் 'நதிகள் நனைவதில்லை'.

    பெற்றோர்கள் தங்கள் கனவுகளை பிள்ளைகள் தலையில் திணிக்க கூடாது. அவரவர் கால்களில் தான் அவரவர் பயணங்கள் இருக்க வேண்டும். குறுக்கு வழியில் வாழ்ந்து கட்டுவதை விட நேர் வழியில் வாழ்ந்து குடிசை யில் தூங்குவதே மேல் என்ற கதையசம்சத்தில் இந்த படம் தயாராகிறது

    நேர்மறை எண்ணங்கள்

    நேர்மறை எண்ணங்கள்

    "புதிதாய் பிறந்த கொசு ஒன்று முதல் முறையாய் வெளி உலகைப் பார்க்க பறந்து சென்றது. வெகு நேரம் ஆகி வீடுவந்து சேர்ந்தது. அருகில் வந்து நின்ற தாய் கொசு, அதனைப் பார்த்துக் கேட்டது. "முதன் முதலாக வெளியே போனாயே, உலகம் எப்படி இருக்கிறது?" என்று கேட்டதற்கு, அதற்கு "அருமையாக இருந்தது, நான் போகிற வழியெல்லாம் என்னை எல்லோரும் கைதட்டி வரவேற்றார்கள்." என்றது குட்டிகொசு!

    தாயின் பெருமை

    தாயின் பெருமை

    தன்னை கொல்வதற்காக இரு கைகளையும் சேர்த்து ஓங்கி அடிக்கின்ற மனிதர்களின் இரு கை ஓசையை தனக்கான கைத்தட்டல் என்று நேர்மறையாக எடுத்துக்கொண்ட அந்த குட்டிக் கொசுவை நினைத்து தாய் கொசு பெருமை கொண்டது.

    நாயகனின் காதல்

    நாயகனின் காதல்

    அதுபோல, வேலையும், பொருளாதாரமும் நாயகனைத் துரத்த, அதிலிருந்து தப்பித்து காதலை சமன் செய்வதே 'நதிகள் நனைவதில்லை' படத்தின் கதை." என்று தெரிவித்தார் இயக்குனர் பி.சி. அன்பழகன்.

    கனவுகளை திணிக்காதீர்கள்

    கனவுகளை திணிக்காதீர்கள்

    பெற்றோர்கள் தங்கள் கனவுகளை பிள்ளைகள் தலையில் திணிக்க கூடாது. அவரவர் கால்களில் தான் அவரவர் பயணங்கள் இருக்க வேண்டும். குறுக்கு வழியில் வாழ்ந்து கட்டுவதை விட நேர் வழியில் வாழ்ந்து குடிசை யில் தூங்குவதே மேல் என்ற கதையசம்சத்தில் தயாராகிறது

    குமரி மாவட்ட காதல்

    குமரி மாவட்ட காதல்

    நதிகள் நனைவதில்லை படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்தது. அதைதொடர்ந்து கன்னியாகுமர், அகஸ்தீஸ்வரம், கீழமணக்குடி, பேச்சுப்பாறை, மாத்தூர் தொட்டிப்பாலம், ஈச்சன்விளை, காயம்பூபதி, வால்குளம், மந்தாரம்புதூர், மண்ணடி, ஆண்டித்தோப்பு, திற்பரப்பு போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

    சென்னையிலும் படப்பிடிப்பு

    சென்னையிலும் படப்பிடிப்பு

    அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வட்டக்கோட்டை, முருகன்குன்றம், பொற்றையடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்க உள்ளது.

    குமரி பேச்சுத்தமிழ்

    குமரி பேச்சுத்தமிழ்

    குமரி மாவட்ட பேச்சு தமிழ் படம் முழுவதும் எதிரொலிக்கும் வகையில் இப்படத்தின் வசனம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இனிமையான பாடல்கள்

    இனிமையான பாடல்கள்

    சவுந்தர்யன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை புலமைப்பித்தன், முத்துலிங்கம், கருபண் ஆகியோர் எழுதியுள்ளனர். ஜேசுதாஸ், வசந்தரா தாஸ், சின்மயி, சைந்தவி, அனுராதா ஸ்ரீராம், வேல்முருகன், ரீட்டா, சாய்சரண் ஆகியோர் பாடல்கள் பாடியுள்ளனர்.

    மாற்றுத்திறனாளிகள் நடிப்பில்

    மாற்றுத்திறனாளிகள் நடிப்பில்

    ஜேசுதாஸ் பாடிய ஜீவன் உள்ள போதே வாழ்க்கை கெட்டு போச்சு வாழ்க்கை கெட்ட பின்னே இன்னும் என்ன மூச்சு என்ற பாடல் காட்சியில் மாற்றுத் திறனாளிகள் நடித்துள்ளனர். தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் பாடலாக இது உருவாக்கப்பட்டு உள்ளது.

    பிரணவ் – மோனிகா

    பிரணவ் – மோனிகா

    இதில் ஹீரோவாக பிரணவ் என்பவர் நடிக்க, ஹீரோயின்களாக பார்வதி ஓமனக்குட்டன், மோனிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் பாலாசிங், செந்தில், குண்டுகல்யாணம், சிங்கமுத்து, மதுரை முத்து, பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் சீத்தாராமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

    English summary
    "Nadhigal Nanaivathillai" which is to be directed by Nanjil PC Anbazhagan. Former beauty queen Parvathy Omanakuttan plays a village belle in it. Sources close to the film unit say that movie buffs will be surprised at her looks when Nadhigal Nanaivathillai hits the screens!
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X