»   »  குற்றம் சாட்டும் ஹீரோ, பல்ட்டி அடிக்கும் விமர்சகர்: இது பாலிவுட் பஞ்சாயத்து

குற்றம் சாட்டும் ஹீரோ, பல்ட்டி அடிக்கும் விமர்சகர்: இது பாலிவுட் பஞ்சாயத்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது ஷிவாய் படத்தை பற்றி தவறாக பேச இயக்குனர் கரண் ஜோஹார் நடிகரும், விமர்சகருமான கேஆர்கேவுக்கு ரூ.25 லட்சம் கொடுத்ததாக நடிகர் அஜய் தேவ்கன் குற்றம் சாட்டியுள்ளார்.

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் ஷிவாய். வரும் அக்டோபர் மாதம் 28ம் தேதி ரிலீஸாகிறது. அதே தினத்தில் தான் கரண் ஜோஹார் இயக்கத்தில் ரன்பிர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா நடித்துள்ள ஏ தில் ஹை முஷ்கில் படமும் வெளியாகிறது.

இந்நிலையில் தான் பாலிவுட்டில் புது பஞ்சாயத்து கிளம்பியுள்ளது.

அஜய்

எனது ஷிவாய் படம் பற்றி தப்பாக பேசுமாறு கூறி கரண் ஜோஹார் நடிகரும், விமர்சகருமான கேஆர்கேவுக்கு ரூ. 25 லட்சம் பணம் கொடுத்துள்ளார். நீங்களே அதை கேளுங்கள் என்று கூறி யூடியூப் வீடியோ இணைப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் அஜய் தேவ்கன்.

விசாரணை தேவை

விசாரணை தேவை

கரண் ஜோஹார் கேஆர்கேவுக்கு பணம் கொடுத்து என் படத்தை பற்றி தவறான கருத்து பரப்புமாறு கூறியது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று அஜய் தேவ்கன் கூறியுள்ளார்.

சினிமா

சினிமா

நான் இந்திய திரையுலகில் 25 ஆண்டுகளாக உள்ளேன். திரையுலகில் உள்ளவர்களே இவ்வாறு குறுக்கு வழியில் நடப்பது சரி அல்ல. கரண் ஜோஹார் கேஆர்கேவுக்கு பணம் கொடுத்தாரா என்பதை நிச்சயம் விசாரிக்க வேண்டும் என்று அஜய் குமுறியுள்ளார்.

கேஆர்கே

கரண் ஜோஹார் ஒன்றும் எனக்கு பணம் அளிக்கவில்லை. அஜய் தேவ்கன் தான் ஏ தில் ஹை முஷ்கில் படத்தை பற்றி தவறாக பேச எனக்கு பணம் கொடுக்க முன் வந்தார். நான் பணம் வாங்க மறுத்துவிட்டேன். இலவசமாக செய்வதாக கூறினேன் என கேஆர்கே ட்வீட் செய்துள்ளார்.

English summary
Bollywood actor Ajay Devgn has accused director Karan Johar of paying Rs. 25 lakh to self proclaimed critic KRK to bash his upcoming movie Shivaay.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil