தெலுங்கு படத்தில் கமிட்டான கர்ணன் பட நடிகை… ஹீரோ யார் தெரியுமா !

சென்னை : கர்ணன் திரைப்படத்தின் மூலம் நம் மனதை கவர்ந்த மலையாள நடிகை ரஜிஷா விஜயன் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

தெலுங்கில் பிரபல நடிகர் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

ராமாராவ் ஆன் டியூட்டி என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

மலையாள நடிகை

மலையாள நடிகை

தொலைக்காட்சித் தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் ரஜிஷா விஜயன். இவர் அனுராக கரிக்கின் வெள்ளம் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் நுழைந்தார். முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.

வெற்றி பெற்றது

வெற்றி பெற்றது

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல மலையாளத் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.மேலும், ஜூன் என்ற திரைப்படத்தில் அழகாக நடித்து திறமையான நடிகை என பெயர் எடுத்தார்.

தமிழில் அறிமுகம்

தமிழில் அறிமுகம்

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்த ரஜிஷா விஜய். அப்படத்தில் திரௌபதை கதாபாத்திரத்தில், தனது கதாபாத்திரத்தின் அழுத்தம் உணர்ந்து நடித்து திருப்பார். தற்போது இவர், கார்த்தியின் சர்தார் திரைப்படத்திலும், சூர்யாவுடன் படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் அறிமுகம்

தெலுங்கில் அறிமுகம்

இந்நிலையில் , தெலுங்கில் பிரபல நடிகர் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 'ராமாராவ் ஆன் டியூட்டி'என தலைப்பிடப்பட்டுள்ள அந்த படத்தின் மூலம் தெலுங்கில் தனது முதல் அறிமுகத்தை கொடுக்க உள்ளார். இப்படத்தை சரத்மாந்தவா இயக்க உள்ளார். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசை அமைக்க உள்ளார்.இப்படத்தில் படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X