»   »  பத்மாவத் படத்தை எதிர்த்து அட்டூழியம் செய்த கர்னி சேனா அடுத்ததாக...

பத்மாவத் படத்தை எதிர்த்து அட்டூழியம் செய்த கர்னி சேனா அடுத்ததாக...

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பத்மாவத் படத்திற்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபட்ட கர்னி சேனா அமைப்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஷாஹித் கபூர் உள்ளிட்டோர் நடித்த பத்மாவத் படத்திற்கு எதிராக கர்னி சேனா அமைப்பு தீவிர போராட்டத்தில் ஈடுபட்டது.

கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுராஜ் பால் சிங் அமு குருகிராமில் கைது செய்யப்பட்டார்.

ஹிட்

ஹிட்

கர்னி சேனா உள்ளிட்ட அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் பத்மாவத் படத்தை பார்க்கும் ஆவல் மக்களுக்கு அதிகரித்துள்ளது. பாக்ஸ் ஆபீஸில் வசூல் மழையாக உள்ளது.

பன்சாலி

பன்சாலி

பத்மாவத் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் தாயை பற்றி படம் எடுக்கப் போவதாக ஸ்ரீ ராஜ்புட் கர்னி சேனா அமைப்பு அறிவித்துள்ளது. அந்த படத்திற்கு லீலா கி லீா என்று பெயர் வைக்கப் போகிறார்களாம்.

திரைக்கதை

திரைக்கதை

லீலா கி லீலா படத்தை அரவிந்த் வியாஸ் இயக்குவார், நாங்கள் தயாரிக்கிறோம் என்று கர்னி சேனா அமைப்பின் நிர்வாகி கோவிந்த் சிங் தெரிவித்துள்ளார். திரைக்கதை எழுதும் வேலை முடிந்துவிட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மரியாதை

மரியாதை

பன்சாலி எங்கள் அன்னை பத்மாவதியை அவமதித்துவிட்டார். பதிலுக்கு நாங்கள் அவர் பெருமைப்படும் அளவுக்கு படம் எடுக்க உள்ளோம் என்று கோவிந்த் சிங் கூறியுள்ளார்.

ஷூட்டிங்

ஷூட்டிங்

15 நாட்களில் படத்திற்கு பூஜை போட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். ஓராண்டுக்குள் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்கிறார் கோவிந்த் சிங்.

English summary
Karni Sena outfit has announced that it will produce a movie based on the life of Padmaavat director Sanjay Leela Bhasali. The movie will be named as Leela ki Leela and will hit the screens in a year.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil