»   »  கார்த்தி-மணி ரத்னத்தின் 'காற்று வெளியிடை'... வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

கார்த்தி-மணி ரத்னத்தின் 'காற்று வெளியிடை'... வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படத்துக்கு 'காற்று வெளியிடை' என பெயர் சூட்டியுள்ளனர்.

'ஓ காதல் கண்மணி' படத்துக்குப் பின் துல்கர் சல்மான்-கார்த்தி நடிக்கும் புதிய படத்தை மணிரத்னம் இயக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகின.

ஒருசில காரணங்களால் துல்கர் இதிலிருந்து விலகிக்கொள்ள, கார்த்தியை மட்டும் வைத்து சிங்கிள் ஹீரோ சப்ஜெக்ட்டாக படத்தின் கதையை மணிரத்னம் மாற்றியமைத்தார்.

Karthi-Aditi Rao kaatru veliyidai First look Poster

இந்நிலையில் கார்த்தி ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்கும் இப்படத்திற்கு 'காற்று வெளியிடை' என தலைப்பு வைத்திருக்கின்றனர். படத்தின் பெயருடன் சேர்த்து பர்ஸ்ட் லுக்கையும் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

கார்த்தி காதலுடன் அதிதியைப் பார்க்க பின்னணியில் விமானங்கள் பறப்பது போன்று பர்ஸ்ட் லுக்கை வடிவமைத்துள்ளனர். கார்த்தி விமானியாக நடிக்கும் இப்படத்தை முழுவதும் காதல் பின்னணியில் இயக்க மணிரத்னம் முடிவு செய்திருக்கிறாராம்.

இதனால் இப்படம் இன்னொரு அலைபாயுதேவாக இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

English summary
Karthi- Aditi Rao Kaatru Veliyidai First look Poster today Revealed.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil