»   »  'அந்த' 2 விஷயம் கார்த்தி முகத்திலேயே எழுதி ஒட்டியிருக்கே: அதிதி ராவ் ஹைதரி

'அந்த' 2 விஷயம் கார்த்தி முகத்திலேயே எழுதி ஒட்டியிருக்கே: அதிதி ராவ் ஹைதரி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்தி ரொம்ப ரொம்ப அன்பானவர், பொறுமையானவர். அது அவர் முகத்திலேயே எழுதப்பட்டுள்ளது. எந்த சூழலிலும் நிதானமாக இருப்பார். இது எல்லாம் கடவுளின் அருள் என அதிதி ராவ் ஹைதரி தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கியுள்ள காற்று வெளியிடை படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார் பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைதரி. படம் வரும் 7ம் தேதி ரிலீஸாகிறது.


இந்நிலையில் கார்த்தி குறித்து அதிதி கூறுகையில்,


கார்த்தி

கார்த்தி

காற்று வெளியிடை படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகும் முன்பு நான் கார்த்தியின் படங்களை பார்த்தது இல்லை. படப்பிடிப்பு தளத்திற்கு வந்த பிறகு வேண்டும் என்றே கார்த்தியின் படங்களை பார்க்கவில்லை.


கதாபாத்திரம்

கதாபாத்திரம்

கார்த்தியை காற்று வெளியிடை கதாபாத்திரம் மற்றும் அவராக மட்டுமே பார்க்க விரும்பினேன். சூப்பர் ஸ்டார் கார்த்தியை அல்ல. கார்த்தியின் படங்களை பார்க்காதது நல்லதாகப் போச்சு.


அன்பானவர்

அன்பானவர்

கார்த்தி ரொம்ப ரொம்ப அன்பானவர், பொறுமையானவர். அது அவர் முகத்திலேயே எழுதப்பட்டுள்ளது. எந்த சூழலிலும் நிதானமாக இருப்பார். இது எல்லாம் கடவுளின் அருள்.


உதவி

உதவி

கார்த்தி என்னை பத்திரமாக பார்த்துக் கொள்வார், நான் அசவுகரியமாக ஃபீல் செய்தால் உதவி செய்வார் என்று எனக்கு தெரியும். அவருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி என்றார் அதிதி.


English summary
Kaatru Veliyidai heroine Aditi Rao Hydari said that her co-star Karthi is ver very kind, patient person and it is written all over his face.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil