தீபாவளி ரேஸில் பிரின்ஸை பந்தாடிய சர்தார்.. பி.எஸ். மித்ரனுக்கு கார் பரிசளித்த கார்த்தி!
சென்னை: சர்தார் படம் தீபாவளி ரிலீஸாக வெளியான நிலையில், மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. குறைவான பட்ஜெட்டில் படத்தை எடுத்து பெரிய வசூலை படம் ஈட்டிய நிலையில், இயக்குநர் பி.எஸ். மித்ரனுக்கு கார் பரிசாக கிடைத்துள்ளது.
இந்த தீபாவளிக்கு ரஜினிகாந்த், விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லையே என ரசிகர்களை போலவே தியேட்டர் ஓனர்களும் புலம்பி வந்தனர்.
சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தியின் படங்கள் தீபாவளிக்கு வெளியான நிலையில், கார்த்தியின் சர்தார் படம் மட்டும் நல்ல வசூலை ஈட்டி அதிக தியேட்டர்களில் ஓடி வருகிறது.

பிளாப்பான பிரின்ஸ்
மிஸ்டர் லோக்கல், சீமராஜா என தொடர்ந்து தோல்விகளை கொடுத்து வந்த சிவகார்த்திகேயன் அதில் இருந்து மீளும் விதமாக டாக்டர், டான் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தார். அந்த படங்கள் 100 கோடி வசூலை கடந்த நிலையில், டாப் நடிகர் பட்டியலில் இடம்பெற்ற சிவகார்த்திகேயன் கடகடவென தனது சம்பளத்தையும் உயர்த்தினார். ஆனால், தீபாவளி வெளியீடாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் அவருக்கு மீண்டும் சரிவை தந்து விட்டது.

சர்தார் சக்சஸ்
தீபாவளி ரேஸில் பிரின்ஸ் படத்தை பந்தாடி கார்த்தியின் சர்தார் படம் சக்சஸை ருசித்தது. இரு வேடங்களில் கார்த்தி அசத்தலாக நடித்து படம் பெரும் வெற்றிப் பெற்ற நிலையில், சர்தார் 2 படத்தையும் விரைவிலேயே இயக்கப் போவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த வெற்றிக்கு காரணமான இயக்குநர் பி.எஸ். மித்ரனுக்கு மிகப்பெரிய பரிசு கிடைத்துள்ளது.

கார் பரிசளித்த கார்த்தி
சர்தார் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் பி.எஸ். மித்ரனுக்கு தயாரிப்பு தரப்பிலிருந்து டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் பரிசளித்துள்ளனர். நடிகர் கார்த்தி கார் சாவியை இயக்குநருக்கு வழங்கி அவரை கட்டித் தழுவி அடுத்த பாகத்தின் கதையை இன்னமும் சிறப்பாக எழுதுங்க, சீக்கிரமே சூட்டிங்கிற்கு வர ரெடியாக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

இயக்குநர் ஹேப்பி
சமீப காலமாக வெற்றிப் பெற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் இயக்குநர்களுக்கு கார் வழங்கி வருகின்றனர். ஆரம்பத்தில் நடிகர் அஜித் இதுபோல கார் பரிசளித்து வந்தார். சமீபத்தில் விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜுக்கு கமல்ஹாசன் கார் பரிசளித்தார். இந்நிலையில், தற்போது கார்த்தி பட இயக்குநருக்கு கார் பரிசாக கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











