twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையைக் கிளப்பும் சர்தார்: மூன்றாவது நாளில் செம்மையான கலெக்‌ஷன்

    |

    சென்னை: கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் 21 திரையரங்குகளில் வெளியானது.

    பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது.

    முதல் நாளை விடவும் அடுத்த இரண்டு நாட்களில் தரமான வசூல் செய்து பட்டையைக் கிளப்பி வருகிறது சர்தார்.

    சர்தார் பாக்ஸ் ஆஃபிஸ் இரண்டாம் நாள்: தீபாவளி ரேஸில் கெத்து காட்டும் கார்த்தி!சர்தார் பாக்ஸ் ஆஃபிஸ் இரண்டாம் நாள்: தீபாவளி ரேஸில் கெத்து காட்டும் கார்த்தி!

    தீபாவளி ரேஸில் சர்தார்

    தீபாவளி ரேஸில் சர்தார்

    கார்த்தியின் நடிப்பில் விருமன், பொன்னியின் செல்வன் என அடுத்தடுத்து வெளியான இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. அதனைத் தொடர்ந்து மூன்றாவதாக சர்தார் படத்தையும் தீபாவளி ரேஸில் களமிறக்கிய கார்த்திக்கு ஹாட்ரிக் ஹிட் கிடைத்துள்ளது. பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம் ஆக்சனில் மட்டும் இல்லாமல், தண்ணீர் அரசியலும் பேசி கவனிக்க வைத்துள்ளது. கார்த்தியுடன் ரஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

    மூன்றாம் நாள் வசூல்

    மூன்றாம் நாள் வசூல்

    சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்துடன் மோதிய கார்த்தியின் சர்தாருக்கு முதல் நாளில் பெரிய ஓப்பனிங் கிடைக்கவில்லை. இதனால், முதல் நாளில் சர்தார் 4 முதல் 5 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூலித்தது. இதனிடையே சர்தார் படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தால், அடுத்த இரண்டு நாட்களிலும் சர்தாருக்கு செல்லும் ரசிகர்கள் கூட்டம் அதிகமானது. அதேநேரம், பிரின்ஸ் படத்திற்கு கிடைத்த நெகட்டிவான விமர்சனங்களும் சர்தாரின் வசூலுக்கு ப்ளஸாக அமைந்துவிட்டது. இந்நிலையில், சர்தார் திரைப்படம் மூன்றாம் நாளில் மட்டுமே 8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    முதல் வாரம் ரிப்போர்ட்

    முதல் வாரம் ரிப்போர்ட்

    முதல் நாளில் 4 முதல் 5 கோடி வரை மட்டுமே வசூலித்த சர்தார், இரண்டாம் நாளில் 5 முதல் 6 கோடி வரை வசூலித்தது. மூன்றாவது நாளில் 8 கோடி வசூல் செய்துள்ளதால், முதல் வாரத்தில் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் 20 கோடி ரூபாய் கலெக்‌ஷன் கிடைத்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த வாரத்திற்கான டிக்கெட் புக்கிங்கும் அதிகரித்துள்ளது. இதனால், சர்தார் கலெக்‌ஷன் இந்த வார முடிவுக்குள் 50 கோடி வரை வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என கார்த்தி நடிப்பில் இந்தாண்டு வெளியான 3 படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூலிலும் லாபம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கார்த்தி ஹேப்பி அண்ணாச்சி

    கார்த்தி ஹேப்பி அண்ணாச்சி

    பிரின்ஸ் படத்துடன் ஒப்பிடும் போது சர்தாரின் வசூல் மூன்றாம் நாளில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 45 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள சர்தார், ஏற்கனவே ப்ரீ ரிலீஸ் பிசினஸில் 41 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விருமன், பொன்னியின் செல்வனை தொடர்ந்து சர்தாரும் ஹிட் அடித்துள்ளதால் ஹேப்பியாக இருக்கிறார் கார்த்தி. விரைவில் அவரது அடுத்த படமான 'ஜப்பான்' ஷூட்டிங் தொடங்கவுள்ளதால், அதில் கலந்துகொள்ள தயாராகிவிட்டாராம்.

    English summary
    Karthi’s Sardar movie has been released in theaters as a Diwali special. Similarly, Sivakarthikeyan’s Prince film was released. Sardar has had a decent opening worldwide as the film collected Rs 8 crore on its third day. Sardar film has collected Rs 20 crore in its three days of release, as per the early box office estimates.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X