கார்த்தியின் விருமன் ... வெளியான லேட்டஸ்ட் ஹாட் அப்டேட்

சென்னை : நடிகர் கார்த்தி சமீபத்தில் தான் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் தனது போர்ஷன்களை முடித்ததாக சோஷியல் மீடியாவில் அறிவித்தார். ஏற்கனவே கார்த்தி நடித்து வரும் சர்தார் படமும் கிட்டதட்ட முடிவடையும் நிலையில் உள்ளது.

Karthis Viruman shooting will begin in Theni

ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத் தேவன் கேரக்டரில் நடிப்பதற்காக நீண்ட தலைமுடியுடன் இருந்து வருகிறார். சர்தார் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதில் வயதான ஒரு கேரக்டருக்காக நீண்ட தலைமுடி, நரைத்த தாடி, தோல் சுருங்கிய தோற்றத்துடன் காணப்படுகிறார். இதைத் தொடர்ந்து அடுத்ததாக நடிக்க உள்ள விருமன் படத்திற்காக புதிய லுக்கிற்கு மாற உள்ளார் கார்த்தி.

கொம்பன், கடைக்குட்டி சிங்கம், விருமன் என வரிசையாக கிராமத்து கதைகளில் நடிப்பதால் படத்திற்கு படம் கேரக்டர்களில் வித்தியாசம் காட்ட தனது லுக்கை மாற்றி நடிக்க, அதிக கவனம் செலுத்தி வருகிறாராம் கார்த்தி.

கொம்பன் படத்தை இயக்கிய டைரக்டர் முத்தையா, கார்த்தியை வைத்து மீண்டும் கிராமத்து கதையை இயக்க போகிறார். விருமன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் பற்றிய அறிவிப்பு இரண்டு வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் டைரக்டர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். முதல் படத்திலேயே கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார்.

தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி, விருமன் படத்தின் ஷுட்டில் ஓரிரு நாளில் துவங்க உள்ளதாம். முதல்கட்ட ஷுட்டிங் தேனியில் நடத்தப்பட உள்ளதாம். படத்தின் பெரும்பாலான பகுதிகள் இங்கு தான் எடுக்கப்பட உள்ளதாம். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரை மற்றும் தேனியை சுற்றி தான் படத்தின் முழு படப்பிடிப்பும் நடத்தப்பட உள்ளதாம்.

இந்த படத்தில் அதிதி ஷங்கர், தேனிமொழி என்ற கேரக்டரில் தான் நடிக்கிறாராம். குடும்பம் மற்றும் உறவுகளின் முக்கியத்துவம் பற்றி பேசுவது தான் விருமன் படத்தின் கதையாம். இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டைன்மென்ட் தான் தயாரிக்கிறது.

இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். கொம்பன் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் ராஜ்கிரண் முக்கிய ரோலில் நடிக்கிறாராம். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், சூரி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X