வந்தியத்தேவனை மதிக்காத அந்த இருவர்:'பொன்னி நதி'மேக்கிங் வீடியோவில் கார்த்தி சொன்ன தகவல்

சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படம் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் பொன்னி நதி என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில் அடுத்தடுத்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை பிரமாண்டமாக தயாரித்து வரும் லைகா நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் பொன்னி நதி பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் இந்த பாடலில் வந்தியத்தேவன் கேரக்டரில் நடித்த கார்த்தி மற்றும் இந்த பாடலுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்த பிருந்தா மாஸ்டர் ஆகியோர் படத்தில் பணியாற்றி அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.

Karthi shared a interesting things about Ponni Nadhi song experience

குறிப்பாக கார்த்தி இந்த வீடியோவில் கூறும்போது வந்தியத்தேவனை டோட்டலாக மதிக்காத இருவரில் ஒருவர் பூங்குழலி என்றால் இன்னொன்று குதிரை. அந்த குதிரை செய்யும் சேட்டைகளை இந்த பாடலில் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.மற்றவர்களை விட குதிரையிடம் தான் அதிகம் பேசிக் கொண்டிருந்ததாக ஜெயம் ரவி கூட என்னை கிண்டல் செய்தார் என்றார்.

இந்த பாடலின் டியூனை ஏ.ஆர்.ரஹ்மான் போட்டவுடனே நான் ஆட ஆரம்பித்து விட்டேன் என்றும் கார்த்திக்காக சில ஸ்பெஷல் நடன அமைப்புகளை அமைத்துள்ளோம் என்றும் பிருந்தா மாஸ்டர் கூறினார்.கார்த்தி ஜாலியாக பேசி உள்ள இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது. மேக்கிங் வீடியோவே இவ்வளவு ஜாலியாக உள்ளது என்றால் படத்தில் வந்தியத்தேவனின் நக்கல் எப்படி இருக்கும் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

தொடர்ந்து வந்தியத்தேவன் ரோலில் நடிக்கும் கார்த்தி பற்றிய வீடியோக்கள், ப்ரோமோக்களே வெளியிடப்பட்டு வருகிறது. இதனால் ஆதித்ய கரிகாலன் ரோலில் நடிக்கும் விக்ரம், பொன்னியின் செல்வன் ரோலில் நடித்துள்ள ஜெயம் ரவி, குந்தவை ரோலில் நடித்துள்ள த்ரிஷா, நந்தினி ரோலில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் போன்றவர்களின் ப்ரோமோ எப்போது வெளியிடப்படும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழா பற்றிய எதிர்பார்க்கும் ரசிகர்களிடம் அதிகம் காணப்படுகிறது. படத்தின் ரிலீசிற்கு முன் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையிலான பல வீடியோக்களை படக்குழு தொடர்ந்து வெளியிடுவார்கள் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X