»   »  அதை மட்டும் சொல்லிடாதீங்க!- கார்த்திக் சுப்பராஜின் வேண்டுகோள்

அதை மட்டும் சொல்லிடாதீங்க!- கார்த்திக் சுப்பராஜின் வேண்டுகோள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இறைவி படத்தைப் பார்க்கும் யாரும் தயவு செய்து கதையை அல்லது க்ளைமாக்ஸை மட்டும் வெளியில் சொல்லிவிட வேண்டாம் என இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எஸ்ஜே சூர்யா, விஜய் சேதுபதி, அஞ்சலி, கமலினி முகர்ஜி ஆகியோர் நடித்த இறைவி படம் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையில் நேற்று வெளியானது.


Karthi Subbaraj's appeal to media

கார்த்திக் சுப்பராஜின் முதல் இரு படங்களுக்கும் இல்லாத நல்ல ஓபனிங் இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளது.


இந்த நிலையில் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், மீடியா மற்றும் படம் பார்த்தவர்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.


அதில், "இதுவரை என் படங்களுக்கு நல்ல ஆதரவு கொடுத்து வந்த அனைவருக்கும் நன்றி. இறைவி படத்தின் கதை மற்றும் க்ளைமாக் காட்சிகள் குறித்து வெளியில் எதுவும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தப் படத்தின் வெற்றிக்கு அது உதவும் என்பதால் உங்கள் ஒத்துழைப்பை எதிர்ப்பார்க்கிறேன்," என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary
Director Karthik Subbaraj requested media and viewers not to disclose the story of his latest movie Iraivi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil