»   »  ஆர்யாவை அடுத்து நண்பன் கார்த்தியுடன் நடிக்கும் விஷால்

ஆர்யாவை அடுத்து நண்பன் கார்த்தியுடன் நடிக்கும் விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபுதேவா இயக்கும் கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தில் விஷாலும், கார்த்தியும் நடிக்கிறார்களாம்.

டான்ஸ் டான்ஸ் என்று இருந்த பிரபுதேவா ஒரு சுபயோக சுபதினத்தில் இயக்குனராக முடிவு செய்தார். டோலிவுட்டில் இயக்குனர் அவதாரம் எடுத்த பிரபுதேவாவுக்கு வெற்றி கிடைத்தது.

இதையடுத்து அவர் தொடர்ந்து படங்கள் இயக்க தீர்மானித்தார்.

போக்கிரி

போக்கிரி

பிரபுதேவா தமிழில் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி என 4 படங்களை இதுவரை இயக்கியுள்ளார். இந்நிலையில் அவர் 5வதாக ஒரு படத்தை இயக்குகிறார். அதற்கு கருப்பு ராஜா வெள்ளை ராஜா என்று பெயரிடப்பட்டுள்ளது.

கார்த்தி, விஷால்

கார்த்தி, விஷால்

கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தில் பாண்டவர் அணியை சேர்ந்த கார்த்தியும், விஷாலும் நடிக்கிறார்கள். நடிகர் சங்க விவகாரத்தில் ஒன்றாக இருக்கும் அவர்களை இந்த படம் மூலம் பெரிய திரையிலும் ஒன்றாக பார்க்கலாம்.

கருப்பு ராஜா வெள்ளை ராஜா

கருப்பு ராஜா வெள்ளை ராஜா

கருப்பு ராஜா வெள்ளை ராஜா படப்பிடிப்பு அடுத்த ஆண்டின் துவக்கத்தில் துவங்க உள்ளது. விஷாலும், கார்த்தியும் அவர்கள் கையில் உள்ள பட வேலையை முடித்துவிட்டு பிரபுதேவாவின் படத்தில் நடிக்கிறார்கள்.

தேவி

தேவி

பாலிவுட்டில் செட்டிலாகியிருந்த பிரபுதேவா பல ஆண்டுகள் கழித்து தேவி படம் மூலம் நடிகராக கோலிவுட் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Karthi and Vishal have come together Karuppu Raja Vellai Raja to be directed by Prabhu deva.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil