‘சர்பட்டா பரம்பரை’ பட வாய்ப்பை தவறிட்ட பிரபல நடிகர்… ஆர்யாவை பார்த்து பொறாமைப்படும் ரசிகர்கள் !
சென்னை : ஓடிடியில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்று வரும் சார்பட்டா பரம்பரை படத்தில் முதலில் நடிக்க இருந்தது கார்த்திக் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
இணையத்தில் கார்த்தி பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆனால், கடைசி நேரத்தில் என்ன காரணத்திற்காக கார்த்தி நடிக்காமல் போனார் என்பது தெரியவில்லை.

இயக்குனர்
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக சார்பட்டா பரம்பரை உருவாகி உள்ளது. வட சென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் முக்கிய விளையாட்டாக பாக்ஸிங் உள்ளது.

துஷாரா
இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா , பசுபதி ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சபீர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

முறுக்கேறிய உடம்பு
80களில் அரசியல் சூழலையும் ,ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் இப்படத்தில் அழகாக கூறப்பட்டுள்ளது. இப்படத்திற்காக ஆர்யா கடுமையாக உழைத்து முறுக்கேறிய உடல் அமைப்பை பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்று வருகிறது.

பொறாமைப்படும் ரசிகர்கள்
இந்நிலையில் ,நடிகர் கார்த்தி சார்பட்டா என்ற படத்தில் நடிக்க உள்ளதாக மெட்ராஸ் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசி உள்ளார். ஆனால் எந்த காரணத்திற்காக அவர் நடிக்கவில்லை என்பது தெரியவில்லை. இந்த வீடியோவை பார்த்த கார்த்தியின் ரசிகர்கள் நல்ல வாய்ப்பு போச்சே என்று வருத்தப்பட்டு வருகின்றனர். மேலும், சார்பட்டா படத்தை பார்க்கும் போது பொறாமையா இருக்கு என்று கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











