Don't Miss!
- News
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து தலீபான்கள் கருத்து.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நிறங்கள் மூன்று.. அதர்வா, சரத்குமார், ரகுமான் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு!
சென்னை: துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் நரேன் தனது அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டுள்ளார்.
அதர்வா லீடு ரோலில் நடிக்கவுள்ள இந்த படத்தில் சரத்குமார் மற்றும் ரகுமான் முக்கிய கதாபாத்திரத்திங்களில் நடிக்க உள்ளனர்.
இந்த
வாரமும்
டபுள்
எவிக்ஷனா...
வெளியேறுவதிலும்
கடுமையாக
போட்டி
போடும்
அந்த
3
பேர்
மூவரும் இணைந்து நிற்கும் கலக்கலான போஸ்டரை தற்போது வெளியிட்டு டைட்டிலை அறிவித்துள்ளார் இயக்குநர் கார்த்திக் நரேன்.

முதல் படத்திலேயே சிக்ஸர்
தமிழ் சினிமாவின் இளம் இயக்குநராக களமிறங்கிய கார்த்திக் நரேன் துருவங்கள் பதினாறு எனும் முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றி பெற்று ஒட்டுமொத்த சினிமா உலகையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். நடிகர் ரகுமான் லீடு ரோலில் நடித்த அந்த த்ரில்லர் படம் கடைசி வரை ரசிகர்களை சீட்டின் நுனியிலேயே உட்கார வைத்தது குறிப்பிடத்தக்கது.

ரிலீசாகாத நரகாசூரன்
இயக்குநர் கெளதம் மேனன் கார்த்திக் நரேனின் சினிமா திறமையை பார்த்து பாராட்டிய நிலையில், தனது தயாரிப்பிலேயே அடுத்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கப் போகிறார் என அறிவிப்பு வெளியிட்டு கேமுக்குள் நுழைந்தார். ஆனால், படப்பிடிப்பு நடக்கும் போதே இருவருக்கும் இடையே ஏகப்பட்ட மோதல்கள் நடக்க நரகாசூரன் திரைப்படம் இன்னமும் வெளியாகாமல் கிடப்பில் கிடக்கிறது. கடந்த ஆண்டு ஒடிடியில் வெளியாகும் என அறிவிப்பு வெளியான நிலையில், மீண்டும் தள்ளிப் போனது.

மண்ணை கவ்விய மாஃபியா
நரகாசூரன் படம் எப்போ ரிலீஸ் ஆகும் என்றே தெரியாத நிலையில், லைகா தயாரிப்பில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் மற்றும் பிரசன்னா நடிப்பில் பயங்கர பில்டப்களுடன் வெளியான மாஃபியா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வொர்க்கவுட் ஆகவில்லை. மாஃபியா படத்தின் இறுதியில் டெக்ஸ்டர் எனும் அடுத்த பாகத்தின் அறிவிப்பு எல்லாம் வெளியாகி வீணானது.

தனுஷின் மாறன்
மாஃபியா படம் ஹிட் ஆகவில்லை என்றாலும், டீசன்ட் ஆன படம் தான் என்கிற பாராட்டுக்களை அள்ளியது. நடிகர் தனுஷுக்கு கார்த்திக் நரேன் சொன்ன மாறன் கதை பிடித்துப் போக மாளவிகா மோகனன் உடன் ஷூட்டிங் ஆரம்பமானது. அந்த படம் இந்த மாதம் ஒடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதர்வா நடிப்பில்
இந்நிலையில், ஐங்கரன் தயாரிப்பில் உருவாக உள்ள 25வது படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குநர் கார்த்திக் நரேனுக்கு கிடைத்துள்ளது. அதர்வா, சரத்குமார் மற்றும் துருவங்கள் பதினாறு பட நடிகர் ரகுமான் என மூவரும் இணைந்து மிரட்டப் போகும் த்ரில்லர் படத்தின் அறிவிப்பை தற்போது இயக்குநர் கார்த்திக் நரேன் வெளியிட்டுள்ளார்.

நிறங்கள் மூன்று
துருவங்கள் பதினாறு போலவே வித்தியாசமான தமிழ் தலைப்பில் படத்தை உருவாக்க வேண்டும் என நினைத்த இயக்குநர் கார்த்திக் நரேன் நிறங்கள் மூன்று எனும் தலைப்பை தேர்வு செய்து முதல் பார்வை போஸ்டரையும் தற்போது வெளியிட்டுள்ளார். சில ஆண்டுகளாக பெரிய வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நடிகர் அதர்வாவுக்கு இந்த படம் திருப்புமுனையாக அமையுமா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

பொன்னியின் செல்வனை தொடர்ந்து
சரத்குமார் மற்றும் ரகுமான் இயக்குநர் மணிரத்னமின் பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்து நடித்துள்ள நிலையில், அடுத்ததாக இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாக உள்ள நிறங்கள் மூன்று படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர். ஹைபர் லிங்க் த்ரில்லர் படமாக இது உருவாக உள்ளது என இயக்குநர் கூறியுள்ளார்.