கார்த்திக் நரேனின் அடுத்த படம் அறிவிப்பு... நடிகர்கள் பட்டியலுக்காக ரசிகர்கள் ஆவல்!

By Vignesh Selvaraj

Recommended Video

கார்த்திக் நரேனின் அடுத்த படைப்பு இதுதான்..!!

சென்னை : தன் முதல் படத்திலேயே பலரது கவனத்தையும் ஈர்த்தவர் 'துருவங்கள் 16' படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன். இவர் அடுத்து 'நரகாசூரன்' என்ற படத்தை இயக்கிவருகிறார்.

'நரகாசூரன்' படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்நிலையில் கார்த்திக் நரேன் தன் மூன்றாவது படத்தை அறிவித்துள்ளார். 'நாடக மேடை' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை அவரே தயாரிக்கிறார்.

கார்த்திக் நரேன்

கார்த்திக் நரேன்

'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் அனைவரையும் வியக்க வைத்த இளம் இயக்குநர் கார்த்திக் நரேன். இப்படத்தை தொடர்ந்து தற்போது 'நரகாசூரன்' என்ற படத்தை இயக்கி உள்ளார். அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

நரகாசூரன்

நரகாசூரன்

'நரகாசூரன்' படத்தின் இறுதிக்கட்ட தொழில் நுட்பப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இந்தப் படத்தை கௌதம் மேனன் தயாரித்து வருகிறார். இப்படம் ரிலீஸாகும் முன்னரே கார்த்திக்கின் அடுத்தப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நாடக மேடை

கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படத்திற்கு 'நாடக மேடை' என டைட்டில் வைத்துள்ளனர். நைட் நாஸ்டால்ஜியா ஃபிலிமோடெய்ன்மென்ட் பட நிறுவனம் சார்பில் கார்த்திக் நரேனே இப்படத்தைத் தயாரிக்கிறார்.

படக்குழு

படக்குழு

ஒளிப்பதிவு சுஜித் சரங், ரோன் ஈத்தன் யோகன் இசை, எடிட்டிங் ஸ்ரீஜித் சரங், கலை சிவசங்கர் என்று தன் பரிவாரங்களுடன் களம் இறங்குகிறார் கார்த்திக் நரேன். இவருக்கு திரைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர்கள் யார்?

நடிகர்கள் யார்?

படத்தின் ஹீரோ ஹீரோயின் இன்னும் உறுதியாகாததால் அது பற்றிய விவரம் அறிவிப்பில் இடம்பெறவில்லை. யாரும் எளிதாக யூகிக்க முடியாத நட்சத்திரக் கூட்டணியுடன் களமிறங்க உள்ளாராம் கார்த்திக். விரைவில் நடிகர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X