»   »  நந்தினி அடியாட்களை வைத்து என் மகனை மிரட்டினார்: கார்த்திக்கின் தாய் புகார்

நந்தினி அடியாட்களை வைத்து என் மகனை மிரட்டினார்: கார்த்திக்கின் தாய் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நந்தினி என் மகனின் அழகில் மயங்கி அவரை எப்படியும் திருமணம் செய்தே தீர வேண்டும் என்று அடியாட்களை அனுப்பி மிரட்டினார். நந்தினி என் மகனை மிரட்டி திருமணம் செய்தார் என கார்த்திக்கின் தாய் சாந்தி தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நந்தினியின் கணவர் கார்த்திக் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து நேற்று முன்தினம் இரவு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்யும் முன்பு இந்த முடிவை தான் எடுக்க தனது மாமனார் ராஜேந்திரன் காரணம் என கடிதம் எழுதி வைத்துள்ளார்.

சாந்தி

சாந்தி

தன் மகன் தற்கொலை செய்து கொள்ள அவரின் மாமனார் ராஜேந்திரன் மற்றும் மனைவி நந்தினியின் டார்ச்சரே காரணம் என கார்த்திக்கின் தாய் சாந்தி போலீசில் புகார் அளிக்கிறாராம்.

மிரட்டல்

மிரட்டல்

நந்தினி என் மகனின் அழகில் மயங்கி அவரை எப்படியும் திருமணம் செய்தே தீர வேண்டும் என்று அடியாட்களை அனுப்பி மிரட்டினார். நந்தினி என் மகனை மிரட்டி திருமணம் செய்தார் என்கிறார் சாந்தி.

நந்தினி

நந்தினி

என் மகன் தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்தும் நந்தினி அதை கண்டுகொள்ளவில்லை. என் மகனின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்கக் கூட வரவில்லை என்று சாந்தி தெரிவித்துள்ளார்.

விட மாட்டேன்

விட மாட்டேன்

என் மகன் தற்கொலை செய்து கொள்ள காரணமான நந்தினி மற்றும் அவரின் தந்தை ராஜேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை ஓய மாட்டேன் என்று சாந்தி கூறியுள்ளார்.

English summary
Karthik's mother Shanthi said that TV serial actress Nandhini sent goondas to threaten her son.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil