twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கார்த்திக் சுப்பராஜை டாப் டைரக்டராக்கிய ஜிகர்தண்டாவிற்கு வயசு 7

    |

    சென்னை : பீசா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஆக்ஷன் த்ரில்லர் படம் தான் ஜிகர்தண்டா. பாபி சிம்ஹா, சித்தார்த், லட்சுமி மேனன், கருணாகரன், சங்கிலி முருகன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் 2014 ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதி ரிலீசானது. இந்த படம் ரிலீசாகி இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைகிறது.

    ஜிகர்தண்டா படத்தை கார்த்திக் சுப்பராஜ் எழுதி இயக்கி இருந்தார். கதிரேசன், ஃபைவ் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் இந்த படத்தை தயாரித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்திற்காக பாபி சிம்ஹாவிற்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும், விவேக் ஹர்ஷனுக்கு சிறந்த எடிட்டிங்கிற்கான தேசிய விருதும் கிடைத்தது.

    சொந்த அனுபவங்களை சொன்ன கார்த்திக் சுப்பராஜ்

    சொந்த அனுபவங்களை சொன்ன கார்த்திக் சுப்பராஜ்

    முற்றிலும் மதுரையில் படமாக்கப்பட்ட இந்த படம் 5 மாதங்களில் படமாக்கி முடிக்கப்பட்டது. டைரக்டராக முயற்சித்துக் கொண்டிருந்த காலத்தில் தனக்கு கிடைத்த அனுபவங்களையும் இந்த படத்தில் சொல்லி இருப்பதாக கார்த்திக் சுப்பராஜ் ஒரு பேட்டியில் கூறி இருந்தார். வன்முறை கலந்த வசனங்களால் இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டது.

    அசால்ட் சேதுவாக பாபி சிம்ஹா

    அசால்ட் சேதுவாக பாபி சிம்ஹா

    ஜிகர்தண்டா படத்தில் கேங்ஸ்டராக அசால்ட் சேது கேரக்டரில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். தன்னை பற்றி எழுதும் பத்திரிக்கையாளர்களை தயங்காமல் கொல்லும் கேரக்டர். அதே சமயம் படமெடுக்க வாய்ப்பு தேடி அலைந்து, பிறகு தானே கேங்ஸ்டர் பற்றி ஆராய்ச்சி செய்து படமெடுக்க மதுரை வரும் இளைஞராக கார்த்திக் கேரக்டரில் சித்தார்த் நடித்திருந்தார். அவரது நண்பராக கருணாகரனும், இட்லி கடை வைத்திருக்கும் பெண்ணாக லட்சுமி மேனனும் நடித்திருப்பார்கள்.

     விஜய் சேதுபதி நடிக்க வேண்டியதா

    விஜய் சேதுபதி நடிக்க வேண்டியதா

    பாபி சிம்ஹா கேரக்டரில் முதலில் விஜய் சேதுபதி தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் சூது கவ்வும், நேரம் ஆகிய படங்களில் பாபி சிம்ஹாவின் நடிப்பை பார்த்து விட்டு, அவர் கேங்ஸ்டர் ரோல் செய்தால் நன்றாக இருக்கும் என கார்த்திக் சுப்பராஜ் முடிவு செய்தார். இந்த படத்திற்கு முன்பு வரை சாக்லேட் பாய் தோற்றத்தில் இருந்த சித்தார்த்தின் இமேஜை மாற்றியது ஜிகர்தண்டா படம் தான்.

    ரஜினி, தனுஷ் படங்களால் தள்ளி போன ரிலீஸ்

    ரஜினி, தனுஷ் படங்களால் தள்ளி போன ரிலீஸ்

    2014 ம் ஆண்டு மே மாதமே இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டியது. ஆனால் அப்போது ரஜினியின் கோச்சடையான் படம் உலகம் முழுவதும் ரிலீசானதால் ஜிகர்தண்டா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. பிறகு ஜுலை மாத இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய நினைத்த போது, தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் ரிலீசாகி ஒரு வாரம் தான் ஆனது. வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த அந்த படத்தின் வசூல் பாதிக்கப்படும் என தியேட்டர் உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டதால் ஜிகர்தண்டா ரிலீஸ் ஆகஸ்ட் 1 ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

    தெலுங்கு, கன்னடத்தில் ரீமேடான படம்

    தெலுங்கு, கன்னடத்தில் ரீமேடான படம்

    முதலில் தமிழில் எடுக்கப்பட்ட ஜிகர்தண்டா படம் பிறகு தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதற்கு என்டிஆர் 1967 லிலும், ராஜேந்திர பிரசாத் 1988 லும் நடித்த சிக்கடு துரகடு என பெயரிடப்பட்டது. பிறகு 2016 ல் கடலகொண்டா கணேஷ் என்ற பெயரில் இதே படம் ரீ மேட் செய்யப்பட்டது. கன்னடத்தில் ஜிகர்தண்டா என்ற பெயரிலேயே இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

    3 நாளில் ரூ.3.75 கோடி வசூல்

    3 நாளில் ரூ.3.75 கோடி வசூல்

    ரிலீசான சமயத்தில் இந்த படம் பல விதமான விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் பெற்றது. இந்த படம் அமெரிக்காவில் மட்டும் 20 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழகத்தில் தொடர்ந்து 50 நாட்கள் ஓடிய இந்த படம், ரிலீசான முதல் 3 நாட்களிலேயே ரூ.3.75 கோடியை வசூலித்தது.

    English summary
    Karthik subburaj's Jigarthanda movie completed 7 years of theatrical release. this film was released in august 1 st, 2014. later this gangster, action thriller movie to remade in telugu and kannada. In kannada this was released in same title.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X