»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகர் கார்த்திக் தாதாக்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுவதை அவரும், அவரை ஆள் வைத்தக் கடத்தியதாகக்கூறப்படும் பட அதிபர் காஜா மைதீனும் மறுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, ரோஜா கம்பைன்ஸ் படநிறுவனத்தின் அதிபர் காஜா மைதீனுக்குத் தரவேண்டியபணத்தைத் தராததால், நடிகர் கார்த்திக் தாதாக்களால் கடத்தப்பட்டார் என்று செய்தி வெளியானது.

இதை மறுத்து நடந்தது என்ன என்பதைப் பற்றி நடிகர் கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:

காஜா மைதீன் எனக்கு நல்ல நண்பர். என் நலனில் அக்கரை கொண்ட ஒரு நல்ல தயாரிப்பாளர். அவரிடம் நான்பணம் வாங்கியது உண்மைதான். ஆனால் இதுகுறித்து எங்களுக்குள் எந்தப்பிரச்சனையும் ஏற்படவில்லைஎன்பதுதான் உண்மை.

இந்த விஷயத்தில் எங்களுக்குள் உள்ள பிரச்சனையைத் தீர்க்க நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் பெரிய உதவிசெய்தார். அதை நான் மறக்க முடியாது.

நான் கடந்த 35 நாட்களாக "காதலே சுவாசம்" என்ற படத்திற்காக தென் ஆப்பிரிக்காவில் இருந்தேன். அதனால்நான் சென்னையில் இல்லாததை வைத்து என்னைக் கடத்திவிட்டார்கள் என்று தவறாக செய்தி பரவியுள்ளது.

இவ்வாறு கார்த்திக் கூறினார்.

இந்தப் பிரச்சனை குறித்து பட அதிபர் காஜா மைதீனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

கார்த்திக் பழகுவதற்கு இனிமையான, நல்ல நண்பர். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு உண்டு.

ஒருமுறை அவருக்குப் பணம் தேவைப்பட்டபோது நண்பர் மூலம் பணம் வாங்கிக் கொடுத்தேன். அதைத் தருவதற்குஅவருக்கு கால தாமதம் ஆனது. இதனால் என் நண்பர் பணத்தைக் விரைந்து கொடுக்குமாறு கேட்டார்.

இதுபற்றி நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்திடம் சொல்லி, அந்தப் பிரச்சனையைப் பேசித் தீர்த்துக் கொண்டோம்.இதில் நான் தாதாக்களை வைத்து கார்த்திக்கைக் கடத்தினேன் என்று கூறுவதில் துளி கூட உண்மையில்லை.

இவ்வாறு காஜாமைதீன் கூறினார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil