»   »  தமிழகமே திரண்டு இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்!- கரு பழனியப்பன்

தமிழகமே திரண்டு இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்!- கரு பழனியப்பன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இணையற்ற சாதனைக்குச் சொந்தக்காரரான இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ் திரையுலகம் மட்டுமல்ல, தமிழ்நாடே இணைந்து ஒரு பெரும் பாராட்டு விழாவை நடத்த வேண்டும் என்று இயக்குநர் கரு பழனியப்பன் கேட்டுக் கொண்டார்.

இளையராஜா இசையில் உருவாகியுள்ள ராணி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இசைத் தட்டை இளையராஜா வெளியிட, சமுத்திரக்கனி, கரு பழனியப்பன், பேரரசு உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

Karu Pazhaniappan's appeal to Ilaiayaraaja's sons

இந்த விழாவில் இயக்குநர் கரு பழனியப்பன் பேசுகையில், "நான் யாரிடமும் இதுவரை கோரிக்கைகள் ஏதும் வைத்ததில்லை. ஏனென்றால் கோரிக்கைகள் வைத்தால் ஏதாவது பிரச்சனை வரும் அதனால்தான். இப்போது முதன் முறையாக இசைஞானி இளையராஜா அவர்களிடம் கோரிக்கை வைக்கப் போகிறேன். அவர் யுவன் ஷங்கர் ராஜா அவர்கள் போன்று ஒரு படத்துக்கு முழுமையாக இசையமைக்க வேண்டும். ஏனென்றால் பல வருடங்களுக்கு முன் அவர் இசையமைத்த படங்களையே நாம் இன்று வரைக் கேட்கிறோம் அப்படி இருக்கும்போது அவர் இந்த காலகட்டத்துக்கு ஏற்றவாறு இசையமைக்கும்போது அதை இன்னும் பல ஆண்டுகள் தாண்டி அனைவரும் ரசிப்பார்கள் என்பது உறுதி.

எனக்கு கார்த்திக் ராஜா அவர்களிடமும், யுவன் ஷங்கர் ராஜாவிடம் இன்னும் ஒரு கோரிக்கை உண்டு. ஒன்று இசைஞானி இளையராஜா அவர்கள் இது வரை இசையமைத்த படங்களின் லிஸ்டை உருவாக்க வேண்டும்.

மற்றொன்று ஒட்டு மொத்த திரையுலகம் மட்டுமல்ல, தமிழ்நாடே இணைந்து அவருக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பதுதான். இசைஞானிக்கு பாராட்டு விழா ஏனென்றால் ஒட்டு மொத்த ரசிகர்கள் அனைவரும் கண்டிப்பாக அதை கொண்டாடி ரசிப்பார்கள். 40 வருடங்களாக சாதனை புரிந்து வரும் அவரை நிச்சயம் கொண்டாட வேண்டும். கண்டிப்பாக அவர் இதற்கும் மறுப்பு தெரிவிப்பார். நான் யுவனிடம் பேசிகொள்கிறேன்," என்றார்.

English summary
Karu Pazhaniappan has appealed Ilaiayaraaja's sons Karthik and Yuvan to make arrangements for a grand felicitation to Ilaiyaraaja.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil