»   »  கரு பழனியப்பன் நடிக்கும் ‘கள்ளன்’... கேரளாவில் படப்பிடிப்பு தொடங்கியது!

கரு பழனியப்பன் நடிக்கும் ‘கள்ளன்’... கேரளாவில் படப்பிடிப்பு தொடங்கியது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குனர் கரு.பழனியப்பன் ஹீரோவாக நடிக்கும் நடிக்கும் ‘கள்ளன்' படப்பிடிப்பு, கேரள மாநிலம் கொச்சியில் கடந்த வாரம் தொடங்கியது.

தயாரிப்பாளர் வி.மதியழகன் கேமராவை முடுக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.


Karu Pazhaniyappan starring Kallan shooting begins at Kochi

இயக்குனர் அமீரின் உதவியாளர் சந்திரா இயக்கும் இப்படத்தில் புது டில்லியைச் சேர்ந்த தமிழ்ப்பெண் நிகிதா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.


கரு.பழனியப்பன், நிகிதா, நமோ நாராயணன், சௌந்தர் ராஜா ஆகியோர் நடிக்கும் ‘கள்ளன்' படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பாக வி.மதியழகன் மற்றும் ஆர்.ரம்யா இருவரும் தயாரிக்கிறார்கள்.


Karu Pazhaniyappan starring Kallan shooting begins at Kochi

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொச்சினைத் தொடர்ந்து தேனி, போடிமெட்டு பகுதிகளில் நாற்பத்து ஐந்து நாட்கள் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது.


ஒளிப்பதிவு: எம்.எஸ்.பிரபு, இசை: கே, பாடல்கள்:நா.முத்துக்குமார்.


விவசாயத்துக்கும் முந்தைய வேட்டையாடிகள் சமூகத்தைப் பற்றிய பதிவாக இந்தப் படம் உருவாகிறது.

English summary
Debutante director Chandra's Kallan movie shooting was floored at Kochi last week, in which Karu Pazhaniyappan plays the lead role.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil