»   »  கருணாஸ் எம்எல்ஏ இசையமைக்கும் காமெடிப் படம் 'பகிரி'!

கருணாஸ் எம்எல்ஏ இசையமைக்கும் காமெடிப் படம் 'பகிரி'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாட்ஸ் அப்பை மையமாக வைத்து உருவாகும் நகைச்சுவை காதல் கதை 'பகிரி'க்கு கருணாஸ் எம்எல்ஏ இசையமைக்கிறார்.

இன்று சமூக ஊடகங்களில் ஃபேஸ்புக் ,வாட்ஸ் ஆப் போன்றவை தகவல் தொடர்பு புரட்சி செய்து வருகின்றன. இந்த வாட்ஸ்ஆப்பை மையமாக வைத்து ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது.

Karunas MLA turns Music director in Pagiri

வாட்ஸ்ஆப்னா...

படத்தின் பெயர் 'பகிரி'. அதாவது வாட்ஸ் ஆப் என்றால் 'பகிரி' என்று பொருள்படும் வகையில் இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை எழுதி தயாரித்து இயக்குபவர் இசக்கி கார்வண்ணன்..

ஷர்வியா

நாயகனாக பிரபு ரணவீரன் நடித்திருக்கிறார். இவர் விஜய் டிவியின் 'கனாக் காணும் காலங்கள் தொடரின் நாயகனாக நடித்தவர். நாயகி ஷர்வியா, இவர் ஆந்திர வரவு.

ரவிமரியா, ஏ.வெங்கடேசன், சரவண சுப்பையா, மாரிமுத்து, டி.பி. கஜேந்திரன், கே.ராஜன், பாலசேகரன் என பல இயக்குநர்கள் முக்கிய வேடமேற்று நடித்துள்ளார்கள். திருமாவேலன், சூப்பர்குட் சுப்ரமணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

கருணாஸ்

படத்துக்கு ஒளிப்பதிவு வீரகுமார். இசை கருணாஸ் எம்.எல்.ஏ. நடிகர் கருணாஸ் இசையமைத்துள்ள முதல் படம் இதுவே. படத்தில் 3 பாடல்கள். பின்னணி இசையும் அவர்தான்.

கார்வண்ணன்

படம் பற்றி இயக்குநர் இசக்கி கார்வண்ணன் கூறும் போது, '' இது ஒரு நகைச்சுவை கலந்த காதல் கதை. பகிர்தல் தொடர்புடைய கதை . எனவேதான் 'பகிரி' எனப்பெயர் வைத்தோம். தாம்பரம் தாண்டி முடிச்சூரிலிருந்து வேலை தேடி சென்னை வரும் இளைஞன் ஒருவனை மையம் கொள்கிற கதை இது.

இப்போதைய சமூகச்சூழலில் இக்கால இளைஞர்கள் தங்களின் காதல் எப்படி இருக்க வேண்டும், வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும், விருப்பம் ,வேலை எல்லாம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்பதை நகைச்சுவை இழையோட சொல்லியிருக்கிறேன். நான் பகிரவேண்டிய செய்தியையும் சிரிக்கச் சிரிக்க பகிர்ந்திருக்கிறேன்,'' என்கிறார்.

35 நாட்களில்

படப்பிடிப்பு சென்னையில் மட்டுமல்ல , தாம்பரம், முடிச்சூர், ஸ்ரீபெரும்புதூர் போன்ற புறநகர்ப் பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது.

35 நாட்களில் முழுப்படப்பிடிப்பையும் முடித்து வந்துள்ளது, படக்குழுவின் திட்டமிடலுக்கு ஒரு சான்றாகும். விரைவில் பாடல்கள் வெளியாகவுள்ளன.

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த 'பகிரி' படம் ஜூலை மாதம் வெளியாகும் விதத்தில் இறுதிக் கட்டப்பணிகள் முழுவீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

English summary
Karunaas MLA is composing music for a movie titled Pagiri for the first time.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil