»   »  விஜய் சேதுபதி ஜல்லிக்கட்டில் காளையை அடக்கியது இப்படித்தான்!

விஜய் சேதுபதி ஜல்லிக்கட்டில் காளையை அடக்கியது இப்படித்தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'ரேனிகுண்டா' படத்தை இயக்கிய ஆர்.பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'கருப்பன்'. முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தன்யா நடித்துள்ளார். பாபி சிம்ஹா வில்லனாக நடித்துள்ளார்.

ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மற்றும் தேனியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. ஏ.எம்.ரத்னம் தயாரித்த இப்படத்துக்கு இமான் இசையமைக்க, ஷக்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

karuppan Jalllikkattu scene making video

படத்தில் புதிதாக ஏதும் இல்லையென்றாலும், விஜய் சேதுபதி, தன்யா ஆகியோரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் ஜல்லிக்கட்டு காட்சிகளும் ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டன. தியேட்டர்களில் ஓரளவு நல்ல வசூலையே பெற்று வருகிறது 'கருப்பன்'.

ஆர்ட் டைரக்‌டர் உருவாக்கிய காளை மாட்டை வைத்து கிராஃபிக்ஸ் மூலம் உருவாகி இருக்கிறது இந்த ஜல்லிக்கட்டு காட்சி. இந்நிலையில், 'கருப்பன்' படத்தின் ஜல்லிக்கட்டு காட்சிகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன எனும் வீடியோ வெளியாகி இருக்கிறது. 'கருப்பன்' ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

English summary
'Karuppan' is a movie starred by Vijay Sethupathi and directed by R. Panneerselvam. Jallikkattu scenes of 'Karuppan' were praised by fans. A video has released that is about how the Jallikattu scenes were making.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil