பீஸ்ட் சிக்கல்...குவைத், கத்தார் மட்டுமல்ல கரூரிலும் படம் வெளியாகவில்லை
கரூர் : வெளிநாடுகளை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் சில பகுதிகளில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ரிலீசாகாது என கூறப்பட்டு வருவதால் ரசிகர்களும், படக்குழுவினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விஜய் நடித்த பீஸ்ட் படம் நாளை உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது. வலிமை படத்திற்கு பிறகு விஜய்யின் பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீஸ்ட் படம் முதல் நாளில் வசூல் சாதனை படைக்குமா என அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சாதனை படைக்குமா பீஸ்ட்
சமீபத்தில் பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இதில் மால் ஒன்றில் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருப்பவர்களை பிடித்து வைத்திருப்பது போலவும், விஜய் தீவிரவாதிகளுடன் சண்டை போட்டு அனைவரையும் காப்பாற்றுவது போலவும் காட்டப்பட்டது. இந்த டிரைலர் வெளியிடப்பட்ட சில நிமிடங்களில் 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்தது.

குவைத், கத்தாரில் பீஸ்ட்டுக்கு தடை
பீஸ்ட் டிரைலரை ரசிகர்கள் ஒரு புறம் கொண்டாடிக் கொண்டிருக்கையில், இது மணி ஹெய்ஸ்ட், கூர்கா போன்ற படங்களின் காப்பி என விமர்சனங்களும் எழுந்தது. இதற்கிடையில் இதில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளதாலும், வன்முறையை தூண்டும் வகையிலான காட்சிகள் இருப்பதாலும் இந்த படத்தை ரிலீஸ் செய்ய தடைவிதிப்பதாக குவைத் அரசு அறிவித்தது. குவைத்தை தொடர்ந்து கத்தாரிலும் இதே காரணத்திற்காக பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எச்சரித்த முஸ்லீம் அமைப்புகள்
மலேசியா போன்ற மற்ற நாடுகளிலும் பீஸ்ட் படத்திற்கு தடை கேட்கப்பட்டது. வெளிநாடுகளில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பீஸ்ட் டிரைலர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தீவிரவாதிகளாக சித்தரித்திருப்பதாக கூறி அந்த படத்தை தடை செய்ய கேட்டதுடன், படத்திலும் அதே போன்று காட்டப்பட்டிருந்தால் விஜய் மற்றும் டைரக்டர் நெல்சன் வீடுகளில் முன் போராட்டம் நடத்த போவதாகவும், வழக்கு தொடர உள்ளதாகவும் முஸ்லீம் அமைப்புகள் சில எச்சரித்திருந்தன.
Recommended Video

தமிழ்நாட்டிலும் பீஸ்ட்டுக்கு எதிர்ப்பா
இந்நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் பீஸ்ட் படம் ரிலீசாகாது என கரூர் மாநகராட்சி தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். எதற்காக இந்த தடை, என்ன காரணம் என இதுவரை சொல்லப்படவில்லை. அதனால் இதே போன்று தடை தொடர்ந்தால் படத்தின் வசூல் பாதிக்கப்படுமே என படக்குழுவினர் கவலை அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











