twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து - ரஜினியிடம் இருந்து மாறுபடும் விஜய்சேதுபதி

    |

    மெல்போர்ன்: காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் விஜய் சேதுபதி அது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று வெளிப்படையாக கூறியதால் அவருடைய ரசிகர்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    நாடு முழுவதிலும் ஜம்மு காஷ்மீர் விவகாரம் பலத்த எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது உலகளவில் பெரும் விவாதத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்தியா அண்டை நாடான பாகிஸ்தான் உடனான அரசியல் மற்றும் வர்த்தக உறவுகளை ஒன்றின் பின் ஒன்றாக முறித்து கொண்டே வருகிறது.

    Kashmir issue it’s against the Democracy-Actor Vijay Sethupathi

    பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் இணைந்து நிகழ்த்திய இந்த நடவடிக்கைக்கு உலகத் தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வரும் அதே நேரத்தில் பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்.

    சமீபத்தில் தமிழ் திரைப்பட நடிகை கஸ்தூரியும் காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். சட்டப்பிரிவு 370ஐ நீக்கி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது சரியான முடிவு என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அண்மையில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் விருது பெற்ற விஜய் சேதுபதி, தமிழ் வானொலி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், மிஷன் காஷ்மீர் விவாகரம் குறித்து கருத்து தெரிவித்த போது, இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

    அதே வேளையில், இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு எழுதிய புத்தகத்தின் புத்தக வெளியீட்டு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விருந்துனராக கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் மிஷன் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்திற்கு ஆதரவாக தனது பாராட்டுகளையும், வாழ்த்தினையும் தெரிவித்தார். இதன் மூலம் அவர் பாஜகவின் தேசியவாதத்தை ஏற்றுக்கொள்கிறார் என்று சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    அவரவர் தங்களது கருத்தினை தெரிவித்தாலும் இப்பிரச்சனையின் பின்புலத்தை ஆராய்ந்து விசாரித்து பின் நிதானமாக யோசித்த பிறகு தங்களது கருத்தினை பதிவு செய்ய வேண்டும் என்கிறார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பாண்டியராஜன் அவர்கள்.

    அந்த வகையில் மத்திய அரசின் இந்த செயல்பாட்டிற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறுபட்ட கருத்துகள் நடிகர்களிடம் இருந்து வருவது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து நல்ல கருத்துள்ள படங்களையே கொடுத்து வருகிறார். சமீபத்தில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கப்போவதாக இருந்தது. ஆனால் தமிழ் உணர்வாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால், அந்தப் படத்தில் நடிக்கப்போவதில்லை என்று அறிவித்தார். தற்போது காஷ்மீர் விவகாரத்தில் தேவையில்லாமல் வார்த்தையை உதிர்த்துவிட்டு ஏன் அவஸ்தைப் படுகிறார் என்று அவருடைய ரசிகர்களும் நலம் விரும்பிகளும் கவலைப்படுகிறார்கள்.

    English summary
    Actor Vijay Sethupathi open talk in the Kashmir issue, the repeal of Article 370 is against democracy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X