»   »  சிங்களத்தில் தயாராகும் காசிதமிழில் பெரும் வெற்றி பெற்ற காசி திரைப்படம், சிங்களத்தில் ரீ-மேக் செய்யப்படவுள்ளது.வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும் இதுதான் தமிழ் காசியின் ரிஷிமூலம். மலையாளத்தில் வினயன் இயக்கத்தில் கலாபவன் மணிகண் பார்வையற்றவராக நடித்திருந்தார். படம் வெற்றி பெற்றதையடுத்து, தமிழில் விக்ரம் நடிக்க ரீ மேக் செய்யப்பட்டது.கலாபவன் மணியை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு விக்ரம் நடித்திருந்தார். இளையராஜாவின் இசை ராஜாங்கத்தில் ஹரிஹரன் பாடிய 6பாடல்கள் எல்லார் மனதையும் சொக்க வைக்க, படம் தமிழிலும் ஹிட்.கேமராவைக் கையில் தூக்கிய காலத்தில் இருந்து, தமிழில் ஹிட் ஆன படங்களை எல்லாம் தங்கள் மொழியில் ரீ மேக் செய்து வரும்கன்னடத் திரையுலகினர் காசி படத்தையும் ரீமேக் செய்தனர். படம் அங்கு வெள்ளி விழா கண்டது.இப்போது இந்தப் படம் சூர்யா என்ற பெயரில் சிங்களத்தில் தயாராக உள்ளது. இலங்கை தேசிய திரைப்பட கூட்டு ஸ்தாபனத்தைச் சேர்ந்தசரத் பெரேரோ படத்தைத் தயாரிக்கிறார். படத்தில் கதாநாயகனாக நடிப்பதுடன், டைரக்டும் செய்கிறார் நிரஞ்சன் என்ற சிங்கள நடிகர்.சிங்கள மொழியில் முன்னணி கதாநாயகிகளான காஞ்சனா மென்டிஸ், தில் ஹானி ஆகிய இருவரும் கதாயகிகளாக நடிக்கின்றனர்.இவர்களுடன் பைலட் பிரேம்நாத் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்த மாலினி பொன் சேகாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.நம்ம ஊர் டைரக்டர் மகேந்திரனின் மேற்பார்வையில் தயாராகப் போகிறதாம் இந்தப் படம்.

சிங்களத்தில் தயாராகும் காசிதமிழில் பெரும் வெற்றி பெற்ற காசி திரைப்படம், சிங்களத்தில் ரீ-மேக் செய்யப்படவுள்ளது.வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும் இதுதான் தமிழ் காசியின் ரிஷிமூலம். மலையாளத்தில் வினயன் இயக்கத்தில் கலாபவன் மணிகண் பார்வையற்றவராக நடித்திருந்தார். படம் வெற்றி பெற்றதையடுத்து, தமிழில் விக்ரம் நடிக்க ரீ மேக் செய்யப்பட்டது.கலாபவன் மணியை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு விக்ரம் நடித்திருந்தார். இளையராஜாவின் இசை ராஜாங்கத்தில் ஹரிஹரன் பாடிய 6பாடல்கள் எல்லார் மனதையும் சொக்க வைக்க, படம் தமிழிலும் ஹிட்.கேமராவைக் கையில் தூக்கிய காலத்தில் இருந்து, தமிழில் ஹிட் ஆன படங்களை எல்லாம் தங்கள் மொழியில் ரீ மேக் செய்து வரும்கன்னடத் திரையுலகினர் காசி படத்தையும் ரீமேக் செய்தனர். படம் அங்கு வெள்ளி விழா கண்டது.இப்போது இந்தப் படம் சூர்யா என்ற பெயரில் சிங்களத்தில் தயாராக உள்ளது. இலங்கை தேசிய திரைப்பட கூட்டு ஸ்தாபனத்தைச் சேர்ந்தசரத் பெரேரோ படத்தைத் தயாரிக்கிறார். படத்தில் கதாநாயகனாக நடிப்பதுடன், டைரக்டும் செய்கிறார் நிரஞ்சன் என்ற சிங்கள நடிகர்.சிங்கள மொழியில் முன்னணி கதாநாயகிகளான காஞ்சனா மென்டிஸ், தில் ஹானி ஆகிய இருவரும் கதாயகிகளாக நடிக்கின்றனர்.இவர்களுடன் பைலட் பிரேம்நாத் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்த மாலினி பொன் சேகாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.நம்ம ஊர் டைரக்டர் மகேந்திரனின் மேற்பார்வையில் தயாராகப் போகிறதாம் இந்தப் படம்.

Subscribe to Oneindia Tamil

தமிழில் பெரும் வெற்றி பெற்ற காசி திரைப்படம், சிங்களத்தில் ரீ-மேக் செய்யப்படவுள்ளது.

வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும் இதுதான் தமிழ் காசியின் ரிஷிமூலம். மலையாளத்தில் வினயன் இயக்கத்தில் கலாபவன் மணிகண் பார்வையற்றவராக நடித்திருந்தார். படம் வெற்றி பெற்றதையடுத்து, தமிழில் விக்ரம் நடிக்க ரீ மேக் செய்யப்பட்டது.

கலாபவன் மணியை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு விக்ரம் நடித்திருந்தார். இளையராஜாவின் இசை ராஜாங்கத்தில் ஹரிஹரன் பாடிய 6பாடல்கள் எல்லார் மனதையும் சொக்க வைக்க, படம் தமிழிலும் ஹிட்.

கேமராவைக் கையில் தூக்கிய காலத்தில் இருந்து, தமிழில் ஹிட் ஆன படங்களை எல்லாம் தங்கள் மொழியில் ரீ மேக் செய்து வரும்கன்னடத் திரையுலகினர் காசி படத்தையும் ரீமேக் செய்தனர். படம் அங்கு வெள்ளி விழா கண்டது.

இப்போது இந்தப் படம் சூர்யா என்ற பெயரில் சிங்களத்தில் தயாராக உள்ளது. இலங்கை தேசிய திரைப்பட கூட்டு ஸ்தாபனத்தைச் சேர்ந்தசரத் பெரேரோ படத்தைத் தயாரிக்கிறார். படத்தில் கதாநாயகனாக நடிப்பதுடன், டைரக்டும் செய்கிறார் நிரஞ்சன் என்ற சிங்கள நடிகர்.

சிங்கள மொழியில் முன்னணி கதாநாயகிகளான காஞ்சனா மென்டிஸ், தில் ஹானி ஆகிய இருவரும் கதாயகிகளாக நடிக்கின்றனர்.இவர்களுடன் பைலட் பிரேம்நாத் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்த மாலினி பொன் சேகாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

நம்ம ஊர் டைரக்டர் மகேந்திரனின் மேற்பார்வையில் தயாராகப் போகிறதாம் இந்தப் படம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil