என்ன சொல்றீங்க.. கஸ்தூரி கர்ப்பமாகிட்டாரா? அவரே போட்ட ட்வீட்.. வாழ்த்தும் ரசிகர்கள்.. என்ன விஷயம்?

சென்னை: நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் கர்ப்பமானதற்கு வாழ்த்துக்கள் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

சினிமா மற்றும் சீரியல் என பிசியாக நடித்து வரும் நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களிலும் செம ஆக்டிவாக இருந்து வருகிறார்.

புதிய தொடக்கம் என்றும் இந்த செய்தியை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம் என ட்வீட் போட்ட கஸ்தூரி #mrPREGNANT என்கிற ஹாஷ்டேக் போட்ட நிலையில், அவர் கர்ப்பமாக உள்ளாரா என கேள்விகளும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

கஸ்தூரி ட்வீட்

கஸ்தூரி ட்வீட்

நடிகை கஸ்தூரி ட்விட்டரில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பவர். அதே போல அரசியல், விளையாட்டு, சினிமா, சமூகம் என பல விஷயங்கள் தொடர்பாகவும் ட்வீட்களை போட்டு தனது கருத்தை பதிவு செய்வார். அது போன்ற ட்வீட்கள் சில சமயங்களில் சர்ச்சைகளையும் கொண்டு வந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவர் தற்போது பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளது.

கர்ப்பமா

கர்ப்பமா

நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், " New beginnings... happy to share the news with all of you. Thank you all for the wishes. #mrPREGNANT" என தற்போது பதிவிட்டு இருக்கும் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் கஸ்தூரி கர்ப்பமாகி விட்டாரா என்கிற கேள்வியை கிளப்பி அதற்கு வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருவது தான் இந்த பரபரப்புக்கே காரணம்.

ஏப்ரல் ஃபூல்

ஏப்ரல் ஃபூல்

நடிகை கஸ்தூரி ஏப்ரல் ஃபூல் செய்கிறார் என சில ரசிகர்களும், புதிய சீரியலுக்கான கெட்டப் தான் இது என்றும் நடிகை கஸ்தூரி மிஸ்டர் பிரெக்னன்ட் என ஹாஷ்டேக் போட்டுள்ள நிலையில், அது புதுப்படம் அல்லது சீரியலின் பெயராக இருக்கும் என ரசிகர்கள் அந்த ட்வீட்டை டீகோட் செய்து வருகின்றனர்.

குவியும் வாழ்த்துக்கள்

குவியும் வாழ்த்துக்கள்

நடிகை கஸ்தூரி என்ன ட்வீட் போட்டிருக்கிறார் என்பது தெரிந்தும் சில குசும்புக்கார நெட்டிசன்கள் கர்ப்பமானதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை கஸ்தூரி பல ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் ஆகி அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில், இப்படியொரு போஸ்ட் ஏன் என்பது குறித்து விரைவில் அவரே அறிவிப்பார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X