»   »  கதகளி பர்ஸ்ட் லுக் விரைவில்.. சொல்வது விஷால்

கதகளி பர்ஸ்ட் லுக் விரைவில்.. சொல்வது விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் நடித்து வரும் கதகளி படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்று நடிகர் விஷால் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

Kathakali First look Soon - says Vishal

கடந்த சில மாதங்களாக நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தில் மும்முரமாக பணியாற்றிய விஷால், தற்போது நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று பொதுச்செயலாளர் பதவியைக் கைப்பற்றியிருக்கிறார்.

இந்நிலையில் நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் நடிப்பிற்குத் திரும்பியிருக்கிறார் விஷால். பாண்டிராஜ் இயக்கத்தில் கதகளி படத்தில் நடித்து வரும் விஷால் இதுபற்றி பின்வருமாறு கூறியிருக்கிறார்.

"இறுதியாக மீண்டும் கதகளி படப்பிடிப்பிற்குத் திரும்பியிருக்கிறேன், கதகளி படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்து படம் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.

கதகளி பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும், பர்ஸ்ட் லுக் பார்க்க நன்றாக இருக்கிறது. மற்றொருபுறம் நடிகர் சங்கத்தின் பணிகள் கடவுளின் ஆசீர்வாதத்துடன் முழுவீச்சில் நடந்து வருகின்றன" என்று கூறியிருக்கிறார்.

ஆக்க்ஷன் த்ரில்லராக உருவாகி வரும் கதகளி படத்தில் விஷாலின் ஜோடியாக கேத்தரின் தெரசா நடித்து வருகிறார். பாண்டிராஜுடன் இணைந்து விஷால் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வருகிறார்.

பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில் உருவாகி வரும் கதகளி இந்த வருடத்தின் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Finally Vishal back to acting. He Tweeted "Back to Kathakali shoot.finally. Almost nearin completion.first look soon.lookin Gud.nadigar sangam work in full throttle. God bless".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil