Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
உலக நாயகனுடன் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ இயக்குநர்: அடடே இது என்ன புது அப்டேட்டா இருக்குமோ?
சென்னை: போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்தக் கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன்.
சமீபத்தில் விக்னேஷ் சிவனுக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், விக்னேஷ் சிவன், உலக நாயகன் கமலுடன் இருக்கும் புகைப்படங்களின் பின்னணி என்னவாக இருக்கும் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
நாயகன் வந்துட்டார்...விதை நான் போட்டது...விசில் பறக்கும் கமலின் மாஸ் பேச்சு

விக்னேஷ் சிவனும் சிம்புவும்
விக்னேஷ் சிவனின் இயக்குநர் கனவை நனவாக்கியது சிம்பு தான். படம் இயக்க சான்ஸ் தேடிக் கொண்டிருந்த விக்னேஷ் சிவன். முதலில் 'போடா போடி' படத்தை இயக்கினார். இதில், ஹீரோவாக சிம்புவும், நாயகியாக வரலட்சுமி சரத்குமாரும் நடித்திருந்தனர். முதல் படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியடைவில்லை என்பதால், விரக்தியின் உச்சியில் இருந்தார் விக்னேஷ் சிவன். விக்னேஷ் சிவனின் இயக்குநர் கனவை நனவாக்கியது சிம்பு தான். படம் இயக்க சான்ஸ் தேடிக் கொண்டிருந்த விக்னேஷ் சிவன். முதலில் 'போடா போடி' படத்தை இயக்கினார். இதில், ஹீரோவாக சிம்புவும், நாயகியாக வரலட்சுமி சரத்குமாரும் நடித்திருந்தனர். முதல் படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியடைவில்லை என்ப்தால், விரக்தியின் உச்சியில் இருந்தார் விக்னேஷ் சிவன்

கை கொடுத்த விஜய் சேதுபதி
முதல் படத்தின் தோல்வியால், இரண்டாவது படத்தை இயக்க போராடிக் கொண்டிருந்தார் விக்னேஷ் சிவன். அப்போது மெல்ல மெல்ல முன்னணி நடிகராக உயரத் தொடங்கிய விஜய் சேதுபதி, விக்னேஷ் சிவனுக்கு கை கொடுத்தார். அப்படி உருவான 'நானும் ரவுடிதான்' படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தார நடித்திருந்தார். இந்தப் படம் விக்னேஷ் சிவனுக்கு சூப்பர் வெற்றியைக் கொடுத்தது.

ரியல் நாயகியான நயன்
'நானும் ரவுடிதான்' படத்தின் ஷூட்டிங்கின் போது, விக்னேஷ் சிவனுக்கும், நயனுக்கும் இடையில் காதல் மலரத் தொடங்கியது. படத்தில் ஹீரோயினாக நடிக்க வந்த நயன், ஒருகட்டத்தில் விக்னேஷ் சிவனின் நாயகியாக கமிட் ஆனார். இருவரது காதலும் தமிழ் திரையுலகில் எப்போதுமே ட்ரெண்டிங்கில் இருந்து கொண்டே வந்தது. இறுதியாக இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.

செஸ் ஒலிம்பியாட்
திருமணம் முடிந்த கையோடு ஹனிமூனில் பிஸியாக இருந்த விக்னேஷ் சிவன், தற்போது சென்னையில் நடந்துவரும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை இயக்கி வருகிறார். பிரமாண்டமான இந்தப் போட்டியை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைத்ததே ரசிகர்களால் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது. இப்போது அதனை வெற்றிகரமாக இயக்கியும் வருகிறார் விக்னேஷ் சிவன்.

கமலுடன் விக்னேஷ் சிவன்
இந்நிலையில், உலக நாயகன் கமலுடன் விக்னேஷ் சிவன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தை தெறிக்க விடுகின்றன. அதில், இருவரும் கையில் பேனா வைத்துக்கொண்டு, மிகத் தீவிரமாக ஸ்க்ரிப்ட் எழுதி வருகின்றனர். இதனால், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கமல் நடிக்கிறாரா? என்ற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்தது.

இதுதான் நெசம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த 'விக்ரம்' படத்தின் ஹிட், இன்றும் ரசிகர்களை வைப்ரேஷனில் வைத்துள்ளது. இதனால் கமல் - விக்னேஷ் சிவன் கூட்டணி குறித்தும் எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், இந்த போட்டோக்கள், செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்காக இருவரும் சேர்ந்து பணியாற்றிய போது எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில், கமலின் குரலில், தமிழர்களின் பல நூறு ஆண்டுகால வரலாற்றை பின்னணியாகk கொண்ட நிகழ்த்துக் கலை நடனம் அனைவரையும் வியக்க வைத்தது. அதற்கான ஆலோசனையின் போது கமலுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை ஷேர் செய்துள்ள விக்னேஷ் சிவன், மறக்க முடியாத தருணம் என குறிப்பிட்டுள்ளார் .