அரபிக் குத்து பாட்டுக்கு பள்ளி குழந்தைகளுடன் ஆட்டம் போட்ட கத்ரீனா கைஃப்.. டிரெண்டாகும் வீடியோ!

சென்னை: பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் விஜய்யின் பீஸ்ட் பட பாடல்களுக்கு நடனமாடிய வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்த பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியானது.

அந்த படத்தில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் உருவான அரபிக் குத்து பாடல் வீடியோவுக்கு ஏகப்பட்ட பிரபலங்கள் நடனமாடிய நிலையில், கத்ரீனா கைஃப் தற்போது ஆட்டம் போட்டுள்ளார்.

அரபிக் குத்து

அரபிக் குத்து

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், அந்த படத்தில் வெளியான அரபிக் குத்து பாடல் யூடியூபில் அதிகபட்சமாக 280 மில்லியன் வியூஸ் கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. அனிருத் இசையமைத்து பாடிய அந்த பாடலுக்கு சிவகார்த்திகேயன் லிரிக்ஸ் எழுதியிருந்தார். ஜானி மாஸ்டரின் வித்தியாசமான ஸ்டெப்களுக்கு விஜய் அசத்தல் நடனம் போட்டிருந்தார்.

அரபிக் குத்துக்கு ஆட்டம் போட்ட கத்ரீனா

அரபிக் குத்துக்கு ஆட்டம் போட்ட கத்ரீனா

மதுரை, உசிலம்பட்டியில் உள்ள மவுண்ட் வியூ பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக நடிகை கத்ரீனா கைஃபை பள்ளி நிர்வாகம் அழைத்துள்ளது. அந்த பள்ளிக்கு ரொம்பவே சிம்பிளான உடையை அணிந்து கொண்டு வந்த நடிகை கத்ரீனா கைஃப் மாணவர்களுடன் அரபிக் குத்து பாட்டுக்கு செம டான்ஸ் ஆடியுள்ள வீடியோ சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

ஜாலியோ ஜிம்கானாவுக்கும் டான்ஸ்

ஜாலியோ ஜிம்கானாவுக்கும் டான்ஸ்

குழந்தைகளுடன் இணைந்து கொண்டு அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய கத்ரீனா கைஃப் மேடை ஏறிய நிலையில், அந்த பள்ளி ஆசிரியர்களுடன் இணைந்து கொண்டு பீஸ்ட் படத்தில் விஜய் பாடி ஆடிய ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கும் ஆட்டம் போட்டுள்ளார். தற்போது அந்த வீடியோக்களை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

நல்லா ஆடுறீங்க

நல்லா ஆடுறீங்க

பீஸ்ட் படத்தின் பாடல்களுக்கு இன்னமும் மவுசு குறையவில்லை என்றும் பள்ளி, கல்லூரிகள், திருமண நிகழ்ச்சிகள் என அனைத்திலும் விஜய் பட பாடல்கள் தான் பலரையும் நடனமாட செய்கிறது என கமெண்ட் போட்டு வரும் ரசிகர்கள் கத்ரீனா கைஃப்பின் நடனத்தை பார்த்து நல்லா ஆடுறீங்க என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

விஜய்சேதுபதி உடன்

விஜய்சேதுபதி உடன்

கத்ரீனா கைஃப் உடன் நடிகர் விஜய்சேதுபதி நடித்து வரும் பாலிவுட் படம் எப்போ தான் ரிலீஸ் ஆகும் என்றும் விஜய்சேதுபதி ரசிகர்கள் அப்டேட் கேட்க ஆரம்பித்துள்ளனர். கோலிவுட்டில் சினிமா நிகழ்ச்சிகளை எல்லாம் தாண்டி பள்ளி நிகழ்ச்சிக்கே பாலிவுட் நடிகர்கள் வராங்களே என ரசிகர்கள் வாய் பிளந்து பார்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X