»   »  சும்மா சொல்லக் கூடாது, நடிகை கத்ரீனா கைஃப் ரொம்பத் தெளிவு தான்!

சும்மா சொல்லக் கூடாது, நடிகை கத்ரீனா கைஃப் ரொம்பத் தெளிவு தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மீண்டும் சல்மான் கானுடன் சேர்ந்து நடிப்பதை நினைத்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார் முன்னாள் காதலியான கத்ரீனா கைஃப்.

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் சில ஆண்டுகள் சல்மான் கானின் காதலியாக வலம் வந்தார். அதன் பிறகு சல்மானை விட்டுப் பிரிந்து நடிகர் ரன்பிர் கபூருடன் சேர்ந்தார்.

ரன்பிருடனான காதலும் முறிந்துபோய் தற்போது சிங்கிளாக உள்ளார்.

பிளாப்

பிளாப்

பாலிவுட்டில் தீபிகா படுகோனே ஒரு பக்கம் வெற்றி மேல் வெற்றிப் படங்கள் கொடுத்து வருகிறார். அவருக்கு சற்றும் பிடிக்காத கத்ரீனாவோ பிளாப் மேல் பிளாப் கொடுத்துள்ளார்.

சல்மான் கான்

சல்மான் கான்

கத்ரீனாவின் படங்கள் வரிசையாக பப்படமாகியுள்ள நிலையில் அவருக்கு சல்மான் கானின் ஏக் தா டைகர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏக் தா டைகரில் சல்மானும், கத்ரீனாவும் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கத்ரீனா

கத்ரீனா

ஏக் தா டைகரின் இரண்டாம் பாகமான டைகர் ஜிந்தா ஹை படத்தில் மீண்டும் சல்மானுடன் சேர்ந்து நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சல்மான் கடினமான உழைப்பாளி என கத்ரீனா தெரிவித்துள்ளார்.

வயதான சல்மான்

வயதான சல்மான்

டைகர் ஜிந்தா ஹை படத்தில் சல்மான் கான் 70 வயது தாத்தாவாக நடிப்பதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை. அவருக்கு வயதே ஆகாது என்று கூறியுள்ளார் கத்ரீனா. சல்மானின் படங்கள் தொடர்ந்து சூப்பர் ஹிட்டாகி வருகின்ற நிலையில் கத்ரீனா அவருடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார்.

English summary
Katrina Kaif is very much excited about reuniting with her ex-boyfriend, Salman Khan, for the upcoming film, Tiger Zinda Hai, that would be the sequel of Ek Tha Tiger.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil