»   »  எந்திரன் 2: ரஜினி வில்லனாகிறார் அர்னால்டு... நாயகி கத்ரீனா கைப்?

எந்திரன் 2: ரஜினி வில்லனாகிறார் அர்னால்டு... நாயகி கத்ரீனா கைப்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் எந்திரன் இரண்டாம் பாகத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான படம் எந்திரன். இப்படத்தில் நாயகனாகவும், வில்லனாகவும் ரஜினியே இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடித்திருந்தார்.

வசூலில் சாதனை படைத்த இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் ஷங்கர்.

எந்திரன் -2...

எந்திரன் -2...

பிரமாண்டமாக தயாராக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பை 2016 ஜனவரி முதல் தொடங்க திட்டமிட்டுள்ளனர். முதலில் இப்படத்தில் அஜீத் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் ரஜினியே இரண்டாம் பாகத்திலும் நடிப்பார் எனத் தெரிவிக்கப் பட்டது.

கபாலி...

கபாலி...

ரஜினி தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் எந்திரன் -2ல் நடிக்க இருக்கிறார்.

யார் வில்லன்?

யார் வில்லன்?

தமிழ், இந்தி என இரண்டு மொழிகளில் தயாராகும் படம் என்பதால், இப்படத்திற்கு வில்லனாக அமீர்கான் நடிக்க இருப்பதாக முதலில் தகவல் வெளியானது. பின்னர், அமீர்கான் இல்லை, ரஜினியின் வில்லன் விக்ரம் தான் என தகவல்கள் உலா வந்தன.

அர்னால்டு...

அர்னால்டு...

இந்நிலையில், எந்திரன் -2ல் ரஜினியின் வில்லன் விக்ரம் இல்லை, பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு என சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன. ஐ பட ஆடியோ வெளியீட்டிற்காக வந்திருந்த போது ஷங்கர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியிருந்தார் அர்னால்டு. தற்போது அந்த ஆசை நிறைவேறப் போவதாகவும், ரஜினியின் வில்லனாக அவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கத்ரீனா கைப்...

கத்ரீனா கைப்...

வில்லனைப் போலவே படத்தின் நாயகி குறித்தும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படவில்லை. எனவே, இப்படத்தில் ரஜினியின் ஜோடியாக கத்ரீனா கைப் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகைகள்...

பாலிவுட் நடிகைகள்...

தனது முந்தைய சில படங்களில் தொடர்ச்சியாக பாலிவுட் நாயகிகளுடனேயே ஜோடி சேர்ந்து வருகிறார் ரஜினி. எந்திரனில் ஐஸ்வர்யா ராய், கோச்சடையானில் தீபிகா படுகோனே, லிங்காவில் சோனாக்‌ஷி சின்ஹா ஆகியோர் ரஜினி ஜோடியாக நடித்திருந்தனர்.

கருத்துக்கணிப்பு...

கருத்துக்கணிப்பு...

எனவே, ஷங்கருடன் இணையும் ரஜினியின் அடுத்த படத்திற்கு பாலிவுட் கதாநாயகிகள் கத்ரீனா கைப், பிரியங்கா சோப்ரா, கரீனா கபூர் கான்,அனுஷ்கா சர்மா,சோனம் கபூர் ஆகிய 5 பேரில் யார் பொருத்தமாக இருப்பார்கள் என பாலிவுட் சினிமா இணையதளம் ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் கருத்து கணிப்பு நடத்தியது.

எந்திரனின் நாயகி...

எந்திரனின் நாயகி...

அந்த கருத்துக்கணிப்பின் முடிவில், கத்ரீனா கைப்பே பொருத்தமாக இருப்பார் என முடிவையும் வெளியிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் எந்திரன் -2ல் நாயகி கத்ரீனா கைப் தான் என கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் தீபிகா...

மீண்டும் தீபிகா...

ஆனால், இல்லையில்லை மீண்டும் ரஜினியுடன் கோச்சடையானில் நடித்த தீபிகா படுகோனே தான் ஜோடி சேர்கிறார் என்ற தகவலும் உலா வருகின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை ரஜினியின் வில்லன் மற்றும் நாயகி என இன்னும் எத்தனை பேர் தலை உருளப் போகிறதோ.

    English summary
    Sources say, Katrina Kaif was approached to play the female lead in 'Robo 2' and she was offered best package off her career to sign the deal.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil