»   »  இந்த காதலையும் அத்துவிட வந்துட்டாளே: பிரபல நடிகை மீது தீபிகா கோபம்

இந்த காதலையும் அத்துவிட வந்துட்டாளே: பிரபல நடிகை மீது தீபிகா கோபம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், நடிகர் ரன்வீர் சிங்குடன் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

கத்ரீனா, ரன்வீருடன் பார்ட்டியில் கலந்து கொண்டது ஒரு பெரிய விஷயமா என்று கேட்டால் ஆமாம் என்பது தான் பதில். காரணம் ரன்வீர் சிங் நடிகை தீபிகாவின் காதலர்.

தீபிகாவுக்கும், கத்ரீனாவுக்கும் ஆகவே ஆகாது.

பார்ட்டி

பார்ட்டி

இயக்குனர் ஜோயா அக்தர் மும்பையில் உள்ள தனது வீட்டில் பார்ட்டி கொடுத்தார். அந்த பார்ட்டியில் தான் ரன்வீரும், கத்ரீனாவும் கலந்து கொண்டனர்.

தீபிகா

தீபிகா

தீபிகாவுக்கும், ரன்வீருக்கும் இடையே பிரச்சனை என்று கூறப்பட்டபோது நடந்த பார்ட்டி ஒன்றில் ரன்வீர் கத்ரீனாவுடனேயே இருந்துவிட்டு அவருடன் சேர்ந்து கிளம்பிச் சென்றார். இதை பார்த்த தீபாக கடுப்பானார்.

கத்ரீனா

கத்ரீனா

ஏற்கனவே தீபிகா கத்ரீனா மீது கடுப்பில் இருக்கும் நேரத்தில் தான் அவரும், ரன்வீரும் சேர்ந்து மீண்டும் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரன்பிர்

ரன்பிர்

தீபிகா நடிகர் ரன்வீருக்கு முன்பு நடிகர் ரன்பிர் கபூரை காதலித்தார். ரன்பிர் வாழ்வில் கத்ரீனா வர அவர் தீபிகாவை கழற்றிவிட்டார். அதில் இருந்து தீபிகாவுக்கு கத்ரீனாவை கண்டாலே பிடிக்காது.

பட வாய்ப்பு

பட வாய்ப்பு

தீபிகா கத்ரீனாவை பழிவாங்க அவரின் பட வாய்ப்புகளை தட்டிப் பறிப்பதுடன், விளம்பர பட வாய்ப்புகளையும் தட்டிப் பறித்து வருகிறார் என்று அண்மையில் செய்திகள் வெளியாகின.

கத்ரீனா

கத்ரீனா

கத்ரீனா கைஃப் ரன்பிர் கபூரை பிரிந்து தற்போது தனியாக உள்ளார். அவரின் கெரியரை பிக்கப்பாக வைக்க இயக்குனர்களிடம் பரிந்துரை செய்து வருகிறார் முன்னாள் காதலரான சல்மான் கான்.

English summary
Deepika Padukone is reportedly not happy after Ranveer Singh and Katrina Kaif partied together at director Zoya Akhtar's house in Mumbai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil