»   »  காற்று வெளியிடை என் கனவுப் படம்! - கார்த்தி

காற்று வெளியிடை என் கனவுப் படம்! - கார்த்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மணிரத்னம் இயக்கும் அடுத்த படமான காற்று வெளியிடை-யில் நடிக்கும் கார்த்தி, அதை தனது கனவுப் படமாக இருக்கும் என நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.

இதே கருத்தை கார்த்தியின் அண்ணன் நடிகர் சூர்யாவும் தெரிவித்துள்ளார்.


மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் நடிப்பில் உருவாகி வரும் படம் - காற்று வெளியிடை. ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இசை - ஏ.ஆர். ரஹ்மான்.


எதிர்ப்பார்ப்பு

எதிர்ப்பார்ப்பு

இந்தப் படம் பற்றிய அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து மணிரத்னத்தின் புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. நேரடி தமிழ்ப் படம் என்றாலும், தெலுங்கு, மலையாளத்திலும் இப்படம் வெளியாகவுள்ளது.
கார்த்தி

கார்த்தி

இந்தப் படம் குறித்து கார்த்தி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "காற்று வெளியிடை நிச்சயம் எனக்கு கனவுப் படமாகும். இது கற்றுக் கொள்ளும் நேரம். அனைவருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.


சூர்யா

சூர்யா

கார்த்தியின் சகோதரரும் முன்னணி நடிகருமான சூர்யாவும் இதே கருத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது என் சகோதரரின் கனவுப் படம் என்றுதான் சொல்வேன்," என்று தெரிவித்துள்ளார்.


குரு

குரு

2003-ல் உதவி இயக்குநராக மணிரத்னத்திடம் பணியாற்றியவர் கார்த்தி. தற்போது முதல் முறையாக மணிரத்னம் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.


English summary
Actor Karthi says that his Manirathnam directed Katru Veliyidai is a dream project for him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil