பிக் பாஸ் கவின், பீஸ்ட் அபர்ண தாஸ் காம்போவில் ‘டாடா’ படத்தின் சூப்பர் அப்டேட்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான கவின், தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

நட்புன்னா என்னான்னு தெரியுமா?, லிஃப்ட் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து கவனம் ஈர்த்துள்ளார் கவின்.

தற்போது கணேஷ் பாபு இயக்கத்தில் அபர்ணா தாஸுடன் இணைந்து டாடா படத்தில் கவின் நடித்துள்ளார்.

பிக் பாஸ் டூ கோலிவுட்

பிக் பாஸ் டூ கோலிவுட்

விஜய் டீவியின் ரியாலிட்டி ஷோக்களில் முகம் காட்டிவிட்டால் போதும், உலகளவில் பிரபலமாகிவிடலாம் போல. சந்தானம், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, டைரக்டர் நெல்சன் என பல பிரபலங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்த்துள்ளது. அந்த வரிசையில், இப்போது கவினும் புதிய பாதையில் பயணித்து வருகிறார். சரவணன் மீனாட்சி சீரியல், பிக் பாஸ் சீசன் 3 மூலம் லைம் லைட்டுக்கு வந்த கவின், சினிமாவில் ஹீரோவாகவும் என்ட்ரி கொடுத்து அசத்தி வருகிறார். நட்புன்னா என்னான்னு தெரியுமா? படம் மூலம் ஹீரோவானார் கவின்.

தூக்கிவிட்ட லிஃப்ட் மூவி

தூக்கிவிட்ட லிஃப்ட் மூவி

முதல் படத்தில் அதிகம் ரீச் ஆகவில்லை என்றாலும், கவின் நடிப்பில் வெளியான 'லிஃப்ட்' திரைப்படத்தில் அவருக்கு செம்ம ரெஸ்பான்ஸ் கிடைத்தது. வினீத் வரபிரசாத் இயகக்கத்தில் கவின், அம்ரிதா, காயத்ரி ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம், ஹாரர் திரில்லர் ஜானரில் ரசிகர்களை மிரட்டியது. இப்போது வரும் ஹாரர் திரைப்படங்களில் காமெடியும் கலந்து வர, கவின் நடித்த 'லிஃப்ட்' ஒன் அண்ட் ஒன்லி ப்யூர் ஹாரர் படமாக மிரட்டியது. நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான லிஃப்ட், கவினுக்கு மிகப் பெரிய நம்பிக்கை கொடுத்தது.

கையில் குழந்தையுடன் கவின்

கையில் குழந்தையுடன் கவின்

லிஃப்ட் படத்தைத் தொடர்ந்து கவின் நடிப்பில் 'டாடா' திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. கவினின் கையில் குழந்தை இருப்பதை போன்று வெளியான டாடா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. மேலும், சமீபத்தில் இந்தப் படத்தில் இருந்து முதல் பாடலும் வெளியாகி கவனம் ஈர்த்தது. கணேஷ் பாபு இயக்கத்தில் உருவாகும் டாடா படத்தில், கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் பட புகழ் அபர்ணா தாஸ் நடித்துள்ளார். மேலும், விடிவி கணேஷ் ஐஸ்வர்யா பாஸ்கரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

டாடா ஷூட்டிங் அப்டேட்

டாடா ஷூட்டிங் அப்டேட்

'டாடா' படத்தில் இடம்பெற்ற 'மகனே என் கண்மணி' என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த டாடா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படத்தின் ஹீரோ கவின் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், இறுதியாக எடுக்கப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களையும் தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார். டாடா திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X