»   »  'அடுத்த சிவகார்த்திகேயன் இவர்தான்..' - இசை வெளியீட்டு விழாவில் லட்சுமி ராமகிருஷ்ணன்

'அடுத்த சிவகார்த்திகேயன் இவர்தான்..' - இசை வெளியீட்டு விழாவில் லட்சுமி ராமகிருஷ்ணன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
அடுத்த சிவகார்த்திகேயன் இவர் தான் - லட்சுமி ராமகிருஷ்ணன்-வீடியோ

சென்னை : சிவா அரவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'நட்புனா என்னானு தெரியுமா'. லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரவீந்திரன் சந்திரசேகரன் தயாரித்துள்ளார்.

விஜய் டிவி 'சரவணன் மீனாட்சி' சீரியல் புகழ் கவின் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், ரம்யா நம்பீசன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன், கவினை அடுத்த சிவகார்த்திகேயன் என புகழ்ந்தார்.

நட்புனா என்னனு தெரியுமா

நட்புனா என்னனு தெரியுமா

கவின், ரம்யா நம்பீசன் நடித்திருக்கும் 'நட்புனா என்னனு தெரியுமா' படத்தில் நடிகர், பாடலாசிரியர், பாடகர் இயக்குநர் அருண்ராஜ் காமராஜ் மற்றும் விஜய் டிவி ராஜு ஜெயமோகன் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு, தரண் குமார் இசையமைத்துள்ளார்.

தயாரிப்பாளர் ஜெயிக்கணும்

தயாரிப்பாளர் ஜெயிக்கணும்

இந்த விழாவில் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசினார். "இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜெயிக்கணும்ங்கிறது என்னோட ஆசை. என்னோட வேண்டுதலும் கூட. சிலர் ஜெயிக்கணும்னு ரொம்ப ஆசையா இருப்போம். அந்த மாதிரி இவர் ஜெயிக்கணும்னு ஒரு நலம் விரும்பியா நான் விரும்புறேன். இந்த மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்.

அடுத்த சிவகார்த்திகேயன்

அடுத்த சிவகார்த்திகேயன்

முதலில் ஸ்ட்ரைக் ஆன விஷயம்.. இந்த பையன் (கவின்) ரொம்ப சூப்பரா இருக்கான்லனுதான். ரொம்ப அழகா, ரொம்ப ஸ்வீட்டா, ரொம்ப கம்ஃபர்டபிளா நமக்கு பார்க்கும்போதே லவ்வபிளான ஒருய் முகம். கவின் தான் அடுத்த சிவகார்த்திகேயனா?

சிவகார்த்திகேயனை பார்க்கும்போது

சிவகார்த்திகேயனை பார்க்கும்போது

சிவகார்த்திகேயனை முதலில் பார்க்கும்போது இதே மாதிரி தான் இருந்தது. எவ்ளோ க்யூட்டா இருக்கான். அந்த மாதிரி ஒரு ஃபீல் வந்தது எனக்கு கவினை பார்த்ததும். ஒரு ஷாட்லயே இவங்களோட பெர்ஃபாமன்ஸ் தெரிஞ்சிடும். பெரிய உயரங்கள் போவார்.

ரம்யா நம்பீசன்

ரம்யா நம்பீசன்

ரம்யா நம்பீசன் நல்ல திறமை கொண்ட நடிகை. நிறைய எனர்ஜி இருக்கு அவங்களுக்கு. இன்றைய நிகழ்வின் ஹீரோ மியூசிக் டைரக்டர் தரண் குமாருக்கு வாழ்த்துகள்" எனப் பேசினார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

English summary
Kavin and Ramya Nambeesan plays lead roles in the film 'Natpuna ennanu theriyuma'. Recently, Audio launch was held. Speaking at the function, Lakshmi Ramakrishnan praised Kavin. "You are next Sivakarthikeyan.." she said.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil