ரிலீசான 15 நாளில் டிவிக்கு வரும் பிக்பாஸ் பிரபலத்தின் படம்
சென்னை : பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமான கவின், டைரக்டர் நெல்சன் திலீப்குமாரிடம் அசிஸ்டென்டாக பணியாற்றி வருகிறார். மாஸ்டர், டாக்டர், பீஸ்ட் என மாஸ் படங்களில் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றி வருகிறார்.
இவர் முதன் முறையாக ஹீரோவாக நடித்துள்ள படம் லிஃப்ட். டைரக்டர் வினீத் வரபிரசாத் இயக்கிய த்ரில்லர், பேய் படமான இந்த படம் அக்டோபர் 1 ம் தேதி பிரபல ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் ஓடிடி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடமும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

கவின் நடித்த பேய் படம்
இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பிகில் படம் நடிகை அமிர்தா அய்யர் நடித்திருந்தார். ஐடி கம்பெனியில் வேலை செய்யும் இருவரும் ஒரே நாள் இரவில் வேலையில் இருந்து துரத்தி அடிக்கப்படுகிறார்கள். அதற்கு பிறகு அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் அமானுஷ்யங்கள் தான் படத்தின் கதை. இதில் கவினின், டான்ஸ் என அனைத்தும் பாராட்டை பெற்றது.

மிஸ்ஸான தியேட்டர் ரிலீஸ்
முதலில் இந்த படம் தியேட்டரில் தான் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் படத்தின் ரிலீஸ் கேள்விக்குறியாக இருந்தது. ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்ததும் செப்டம்பர் 24 ம் தேதி படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்யப்பட்டு, அக்டோபர் 1 ம் தேதி படமும் ரிலீஸ் செய்யப்பட்டது.

15 நாளில் டிவி ரிலீஸ்
படம் ரிலீசாவதற்கு முன் டிரைலரே அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது. விமர்சன ரீதியாகவும் இந்த படம் பாராட்டைப் பெற்றது. இந்நிலையில் படம் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்ட 15 நாளில் இந்த படம் டிவி.,யில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மறக்காம குறிச்சிவச்சுக்கோங்க
முதல் முறையாக விஜயதசமி நாளான அக்டோபர் 15 அன்று காலை 11 மணிக்கு லிஃப்ட் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக விஜய் டிவி அறிவித்துள்ளது. இந்த தகவல் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைய வைத்துள்ளது. இந்த தகவலை சந்தோஷம் பொங்க சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர். இதே தகவலை கவினும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து, மக்களே மறக்காம குறிச்சி வச்சுக்கோங்க என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தடுத்த பட வாய்ப்புக்கள்
லிஃப்ட் படத்தை தொடர்ந்து நடிகை ரிபா மோனிகாவுடன் இணைந்து ஆகாசவாணி என்ற வெப் சீரிசில் நடித்தார். இதன் ஷுட்டிங் அக்டோபர் 8 ம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இணைந்து ரெளடி பிக்சர்ஸ் பேனரில் தயாரிக்கும் படத்திலும் ஹீரோவாக கவின் நடிக்க உள்ளதாக சமீபத்தில் கூறப்பட்டது.


Click it and Unblock the Notifications











