»   »  நடிகர் திலீப்பின் வாழ்வில் இருந்து மஞ்சு அவுட், நடிகை காவ்யா இன்

நடிகர் திலீப்பின் வாழ்வில் இருந்து மஞ்சு அவுட், நடிகை காவ்யா இன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகை மஞ்சு வாரியரின் திருமண வாழ்வில் புயல் வீசக் காரணமாக கூறப்பட்ட நடிகை காவ்யா மாதவனுக்கும், நடிகர் திலீப்புக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

1995ம் ஆண்டு தனது 17வது வயதில் நடிக்க வந்த மஞ்சு வாரியர் 18 வயதில் திலீப்புக்கு ஜோடியாக நடித்தார். இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து மஞ்சு திலீப்பை கடந்த 1998ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு மஞ்சு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டனர்.

மஞ்சு வாரியர்

மஞ்சு வாரியர்

மஞ்சு வாரியர் 20 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துவிட்டார். இந்நிலையில் அவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

மீண்டும்

மீண்டும்

மஞ்சு நடிப்பை நிறுத்தி பல ஆண்டுகளாகியும் கேரள ரசிகர்களிடம் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்று கேட்டால் மஞ்சு வாரியர் என்றார்கள். இந்நிலையில் தான் மஞ்சு 2014ம் ஆண்டு மீண்டும் நடிக்க வந்தார்.

விவாகரத்து

விவாகரத்து

திலீப்புக்கும், மஞ்சுவுக்கும் மீனாட்சி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் திருமணமாகி குவைத் சென்ற நடிகை காவ்யா மாதவன் கணவரை பிரிந்து கேரளாவுக்கு வந்து செட்டிலாகிவிட்டார். அவருக்கும் திலீபுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கமே அவர் மஞ்சுவை விவாகரத்து செய்ய காரணம் என்று மலையாள திரையுலகில் பேசப்பட்டது.

காவ்யா

காவ்யா

காவ்யா மாதவன் நிஷால் சந்திரா என்பவரை 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டு குவைத் சென்றார். திருமணமான வேகத்தில் அதே ஆண்டு ஜுன் மாதம் கணவரை பிரிந்து கேரளா திரும்பிய அவர் ஜூலை மாதம் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.

திலீப்

திலீப்

திலீப்பும், காவ்யா மாதவனும் சேர்ந்து 18க்கும் மேற்பட்ட படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இந்நிலையில் கணவரை பிரிந்து வந்த காவ்யா திலீப்புடன் ஓவர் நெருக்கம் காட்டியதால் மஞ்சு வாழ்க்கை பாதிக்கப்பட்டது என்று மல்லுவுட்டில் கூறப்படுகிறது.

உண்மை

உண்மை

நானும் மஞ்சுவும் விவாகரத்து பெற காவ்யா காரணம் இல்லை. அந்த காரணத்தை கூறினால் பலர் வாழ்வு பாதிக்கப்படும் என்று திலீப் தெரிவித்தார்.

English summary
Actress Kavya Madhavan who was reportedly the reason for Manju Warrier's divorce married actor Dileep today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil