திறமைசாலிகளுடன் வேலை செய்ய வாய்ப்பளித்த பா. ரஞ்சித்துக்கு நன்றி.. கயல்ஆனந்தி
சென்னை: பல திறமைசாலிகளுடன் வேலை செய்ய வாய்ப்பு தந்த இயக்குநர் பா ரஞ்சித் சாருக்கு நன்றி என்று கூறியுள்ளார் நடிகை கயல் ஆனந்தி.
கயல் அனந்தி தனது ஆரம்ப படம் முதலே எதார்த்த நடிப்பை கொண்டு அனைத்து குடும்ப ரசிகர்களை கவர்ந்துள்ளார். குறிப்பாக பரியேறும் பெருமாள் படத்தில் வரும் இவருடைய ஜோ கேரக்டர் அனைவரையும் கவர்ந்தது.

பரியேறும் பெருமாள் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் படம். மறுபடியும் இவர் நீலம் தயாரிப்புடன் இணைந்து படம் பண்ணுகிறார். படத்தின் பெயர் இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு.
இந்த படத்தை அதியமான் ஆதிரை இயக்குகிறார். மேலும் இப்படத்தில் கயல் ஆனந்தி, ரித்விகா, முனிஷ்காந்த், லிஜிஷ், ஜான் விஜய், நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு டென்மா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பிரஸ் மீட் நேற்று நடந்தது.

இந்த பிரஸ் மீட்டில் அட்டகத்தி தினேஷ், கயல், முனிஷ்காந்த், பா ரஞ்சித், மாரி செல்வராஜ் மற்றும் பலர் பங்கு பெற்றனர். அப்போது கயல் ஆனந்தி தனது அனுபவத்தை பகிர்ந்தார்.
அவர் கூறுகையில், நீலம் என்னோட ஹோம் புரொடக்ஷன் மாதிரி. இந்த நிறுவனத்திலிருந்து போன் பண்ணா நான் ஸ்கிரிப்ட் எதுவும் கேக்காம படம் பண்றதுக்கு ரெடி. இவங்க தேர்வு பண்ற ஸ்கிரிப்டில் அந்த அளவு ஸ்ட்ராங் கன்டென்ட் இருக்கும். பா ரஞ்சித் சாருக்கு நன்றி. பல திறமைசாலி கூட வேலை செய்ய வாய்ப்பு தந்தாங்க. டைரக்டர் அதியமான் சார் ஒரு நல்ல மனிதர் என்றார்.


Click it and Unblock the Notifications











