»   »  கீர்த்தி சுரேஷ் காட்டுல மழை... முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதால் கொண்டாட்டம்!

கீர்த்தி சுரேஷ் காட்டுல மழை... முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதால் கொண்டாட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : மெர்சல் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். விஜய்யின் 62-வது படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

விஜய் 62 படத்திற்கான கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

'பைரவா' படத்தில் விஜய்யுடன் கதாநாயகியாக நடித்த கீர்த்தி சுரேஷ் 'விஜய்-62' படத்தின் மூலம் விஜய்யுடன் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ்

'விஜய் 62' படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் பரிசீலிக்கப்பட்டவர் ரகுல் ப்ரீத் சிங். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'ஸ்பைடர்' படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடித்தார். அப்போதே ரகுல் ப்ரீத் சிங்கிடம் பேசி சம்மதம் வாங்கியிருந்தார் முருகதாஸ்.

ஸ்பைடர் படத்தால் அவுட்

ஸ்பைடர் படத்தால் அவுட்

'ஸ்பைடர்' படம் படு தோல்வியடைந்து, ஏ.ஆர்.முருகதாஸின் மார்க்கெட்டையே அசைத்துப் பார்த்துவிட்டது. எனவே சென்ட்டிமெண்ட்டாக ரகுல் ப்ரீத் சிங் வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறார் முருகதாஸ்.

விஜய்யின் சாய்ஸ்

விஜய்யின் சாய்ஸ்

இந்த விஷயத்தை விஜய்யிடம் சொன்னதும், கீர்த்தி சுரேஷை சிபாரிசு செய்திருக்கிறார் விஜய். அதன் பிறகே அவரையே கமிட் பண்ணியுள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் ஹீரோயின்

கீர்த்தி சுரேஷ் ஹீரோயின்

நடிகை கீர்த்தி சுரேஷ் சூர்யாவுடன் நடித்திருக்கும் தானா சேர்ந்த கூட்டம் பொங்கல் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக நடித்திருக்கும் 'அஞ்ஞாதவாசி' திரைப்படம் வரும் ஜனவரி 10-ம் தேதி வரவுள்ளது.

சண்டக்கோழி 2 படத்தில்

சண்டக்கோழி 2 படத்தில்

விக்ரமுடன் 'சாமி 2' படத்தில் தற்போது கமிட்டாகியுள்ளார். இதனையடுத்து லிங்குசாமி இயக்கும் 'சண்டக்கோழி 2' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறாராம். மலேசியாவில் வரும் ஜனவரி 5 மற்றும் 6-ம் தேதிகளில் நட்சத்திர கலைவிழா நடைபெறவுள்ளது. இதில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் என இரண்டையும் வெளியிட இருக்கிறார்கள்.

அடுத்து விஜய் பட ஷூட்டிங்

அடுத்து விஜய் பட ஷூட்டிங்

மேலும் 'விஜய் 62' படத்தின் ஷூட்டிங் இந்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளது. எனவே, இந்த மாதம் முழுக்க ரசிகர்களுக்கு மட்டுமல்ல கீர்த்தி சுரேஷுக்கும் கொண்டாட்டம் தான். கையில் பிடிக்க முடியாத அளவுக்கு முன்னணி நடிகர்களின் படங்களை வைத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

English summary
Sun Pictures officially announced that, Keerthi Suresh is the heroine for 'Vijay 62'. The second time Keerthi is working with Vijay after 'Bhairava'. 'Thaana serndha koottam' starring Suriya, Keerthi Suresh is preparing for Pongal release. Keerthi Suresh plays the lead role in 'Sandakozhi 2' with Vishal and 'Saamy 2' with Vikram.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X