பழி வாங்குறதுன்னா என்னான்னு தெரியுமா? மிரட்டலாக வெளியான சாணிக் காயிதம் டீசர்.. சம்பவம் கன்ஃபார்ம்!

சென்னை: ராக்கி படத்தின் மூலம் ரசிகர்களை மிரள வைத்த இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் உருவாகி உள்ள அடுத்த படம் தான் சாணிக் காயிதம்.

கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் செய்யப் போகும் தரமான சம்பவம் டீசரிலேயே தெளிவாக தெரிகிறது.

பழி வாங்குவது பற்றி கீர்த்தி சுரேஷ் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைக்கிறது.

ஓடிடி ரிலீஸ்

ஓடிடி ரிலீஸ்

ராக்கி திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட்ட அருண் மாதேஷ்வரன், தனது அடுத்த படமான சாணிக் காயிதம் படத்தை நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் மே 6ம் தேதி ரிலீஸ் செய்யப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாணிக் காயிதம் டீசர்

சாணிக் காயிதம் டீசர்

நடிகர் தனுஷ் தற்போது தனது அண்ணன் செல்வராகவன் நடித்துள்ள சாணிக் காயிதம் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். இந்த படம் முழுக்கவே ராமேஷ்வரத்தில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ராக்கி படத்தை போலவே இந்த படத்தின் ஸ்க்ரீன் பிளேவும் செம ராவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழிவாங்குறதுன்னா என்னன்னு தெரியுமா

பழிவாங்குறதுன்னா என்னன்னு தெரியுமா? என்கிற கேள்வியுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் பேசும் வசனங்கள் நிஜமாவே தெறிக்கிறது. ஒருத்தன் நம்மை கல்லால் அடித்தால், திரும்பவும் கல்லால் அடிப்பது, ஒருத்தன் நம் மேல் எச்சில் துப்பினால் திரும்பவும் துப்புறது.. ஒருத்தன் நம்மை வாழ்க்கையே அழிச்சிட்டான்னா.. அவனை தூக்கி ஜெயில்ல போட்டா அதுக்கு பேரு பழி வாங்குறதா என்கிற வசனமே படத்தின் திரைக்கதை எப்படி இருக்கப் போகிறது என்பதை உணர்த்துகிறது.

துப்பாக்கியுடன் கீர்த்தி சுரேஷ்

துப்பாக்கியுடன் கீர்த்தி சுரேஷ்

தனது வாழ்க்கையை அழித்தவர்களை செல்வராகவன் உடன் இணைந்து கொண்டு ஒவ்வொருத்தராக தேடித் தேடி பழிவாங்கும் காட்சிகள் எல்லாம் பதை பதைக்க வைக்கும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. துப்பாக்கி உடன் கீர்த்தி சுரேஷ் வருவதும், நெற்றியில் பொட்டில்லாமல் அடிபட்ட முகத்துடன் அவர் தோற்றமே மிரட்டுகிறது.

பீஸ்ட்டுக்கு முன்பாக

பீஸ்ட்டுக்கு முன்பாக

பிரபல இயக்குநரான செல்வராகவன் முதன் முதலாக சாணிக் காயிதம் படத்தில் தான் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு தான் விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்ததாக தம்பி தனுஷ் உடன் நானே வருவேன் படத்திலும் செல்வராகவன் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் மே 6ம் தேதி ஓடிடியில் அடுத்த சம்பவத்தை தமிழ் சினிமா செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X