வேற லெவல்.. வடிவேலுக்கு ஜோடியாக போகிறாரா கீர்த்தி சுரேஷ்? பரபரப்பில் கோலிவுட்!

சென்னை: லைகா தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்க உள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

Vadivelu -வின் Naai Sekar படத்தில் இனையும் நடிகை Keerthy Suresh | Suraj

முன்னதாக அந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், கால்ஷீட் காரணமாக பிரியா பவானி சங்கர் நடிக்க முடியவில்லை என எஸ்கேப் ஆகி விட்டாராம்.

இயக்குநர் செல்வராகவன் உடன் இணைந்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் வடிவேலு படத்திலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடிவேலுக்கு ஜோடி இல்லை

வடிவேலுக்கு ஜோடி இல்லை

இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் நடிகர் வடிவேலுக்கு ஜோடியே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனியாக ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ளதால் தான் பிரபல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

லைகா தயாரிப்பு என்பதால்

லைகா தயாரிப்பு என்பதால்

லைகா நிறுவனம் தயாரிக்கும் படம் என்பதால் முன்னணி நடிகைகள் மறுப்பு ஏதும் தெரிவிக்க முடியாத சூழலில் இருப்பதாகவும் வடிவேலுவுடன் இணைந்து நடிக்க சில முன்னணி நடிகைகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியை தழுவியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

லக்கி கேர்ள் எஸ்கேப்

லக்கி கேர்ள் எஸ்கேப்

நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்தில் அந்த லக்கி கேர்ள் நான் தான் என வடிவேலுவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட ரசிகர்கள் அனைவரும் வடிவேலுக்கு ஜோடியாக நடிக்கப் போறீங்களா என கேள்வி எழுப்பி வந்தனர். பிரியா பவானி சங்கரை புக் செய்ய படக்குழுவும் முயற்சித்த நிலையில், ஏகப்பட்ட படங்களில் பிசியாக உள்ள நிலையில், கால்ஷீட் பிரச்சனை இருப்பதால் இப்போதைக்கு புதிய படத்தில் கமீட் ஆக முடியாத நிலை உள்ளதாக எஸ்கேப் ஆகி விட்டாராம் பிரியா பவானி சங்கர்.

கீர்த்தி சுரேஷ் நடிப்பாரா

கீர்த்தி சுரேஷ் நடிப்பாரா

ரஜினியுடன் அண்ணாத்த, மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா, செல்வராகவன் உடன் சாணிக்காயிதம் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷை இந்த படத்தில் நடிக்க வைக்க தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், அவரும் கிட்டத்தட்ட ஓகே சொல்லும் மன நிலையில் தான் உள்ளதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெயிட்டான ரோல்

வெயிட்டான ரோல்

வடிவேலுக்கு இணையான வெயிட்டான ரோல் ஹீரோயினுக்கும் இருப்பதால் நிச்சயம் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் நடிக்க சம்மதிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஹீரோயின் கன்ஃபார்ம் ஆன உடனே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே டைட்டில்

அதே டைட்டில்

நாய் சேகர் டைட்டிலில் நடிகர் சதீஷ் நடித்து வரும் நிலையில், வடிவேலு சுராஜ் இணையும் இந்த படத்திற்கு வேறு ஒரு புதிய டைட்டில் வைக்கலாம் என இயக்குநர் சுராஜ் சொன்னாலும், நாய் சேகர் டைட்டிலே வேண்டும் என வடிவேலு உறுதியாக இருந்ததால் தான் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்கிற டைட்டிலை சுராஜ் வைத்திருப்பதாகவு கூறப்படுகிறது.

ஆயுத பூஜை

ஆயுத பூஜை

வரும் ஆயுத பூஜைக்கு வடிவேலு சுராஜ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பெரிய அளவில் பல சினிமா நட்சத்திரங்களை வைத்து வெளியிட லைகா நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் பொன்னியின் செல்வன் பட நடிகர்களை வைத்தே ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடவும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X