கொஞ்சம் நிலவு.. ஜி.வி. பிரகாஷ் உடன் தீபாவளி கொண்டாடிய கெனிஷா.. கூட யாருலாம் இருக்காங்க பாருங்க!

சென்னை: நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார் தனது மகளுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தையும் வீடியோ ஒன்றையும் வெளியிட்ட நிலையில், தீபாவளி நாளில் அவருடன் செலவிட்ட அருமையான தருணத்தை கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஷேர் செய்துள்ளார்.

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தி ரவியை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், கெனிஷாவுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இருவரும் ஒன்றாக மேடை வரை ஏறி அதை உறுதிப்படுத்தும் விதமாகவே சுற்றி வருகின்றனர்.

Keneesha celebrates DIwali with Ravi Mohan GV Prakash and Yogi Babu
Photo Credit:

இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு ரவி மோகன் மற்றும் ஜி.வி. பிரகாஷ் உடன் பாட்டுப் பாடி கெனிஷா உற்சாகமடைந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்: மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் நடித்து வந்த ரவி மோகன் விவாகரத்துக்குப் பிறகு தனியாக ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்பதை உருவாக்கி தயாரிப்பாளராக மாறியுள்ளார். ப்ரோ கோட் படத்தை தயாரித்து நடித்து வரும் ரவி மோகன் கோமாளி படத்தின் போது யோகி பாபுவை வைத்து An Ordinary Man எனும் படத்தை இயக்கப் போவதாக உறுதியளித்த நிலையில், தற்போது அந்த படத்தின் வேலைகளில் பிசியாக உள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க கெனிஷா பாட: தீபாவளி பண்டிகை அன்று ரவி மோகன், யோகி பாபு அமர்ந்து வேடிக்கை பார்க்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க "கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு" பாடலை கெனிஷா பாடி அசத்தும் வீடியோவை சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தீபாவளியன்று நாளைய ஜாம்பவான்களுடன் இப்படியொரு தருணத்தை பகிர்ந்துக் கொண்டதில் பெருமையடைகிறேன், நன்றி ஜி.வி. பிரகாஷ் என்று பதிவிட்டுள்ளார்.

டிரெஸ் சூப்பர்: சோஷியல் மீடியாவில் இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து தீபாவளி அதுவுமா கெனிஷா போட்டுள்ள டிரெஸ் ரொம்பவே சூப்பராக உள்ளது என்றும் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்களா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஜீனி படத்தில் வெளியான அபிடி அபிடி பாடல் ஒருபக்கம் டிரெண்டாகி வர அந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X