»   »  நடிகை லிஸிக்கு கேரள ஐகோர்ட்டு நோட்டிஸ்..லிஸியின் தந்தையை கண்டறிய டிஎன்ஏ சோதனை?

நடிகை லிஸிக்கு கேரள ஐகோர்ட்டு நோட்டிஸ்..லிஸியின் தந்தையை கண்டறிய டிஎன்ஏ சோதனை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகை லிஸியின் தந்தை நான்தான் என்று கேரளாவைச் சேர்ந்த வர்க்கி என்பவர் தொடர்ந்த வழக்கில் கேரளா உயர்நீதிமன்றம் லிசிக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

1980 ம் ஆண்டுகளில் மலையாள சினிமா உலகில் கொடி கட்டிப் பறந்தவர் நடிகை லிஸி. 1990 களில் சினிமாவை விட்டு ஒதுங்கிய லிஸி பிரபல இயக்குநர் பிரியதர்ஷனை காதலித்து மணந்து கொண்டார்.

Kerala High Court Issued Notice to Actress Lissy

இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது லிஸி-பிரியதர்ஷன் தம்பதியர் பிரிந்து வாழ்கின்றனர்.இந்நிலையில் நடிகை லிஸியின் உண்மையான தந்தை நான்தான் என்று வர்க்கி என்பவர் தொடர்ந்த வழக்கு மல்லுவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விக்ரம்

மலையாள நடிகை லிஸி தமிழில் விக்ரம், ஆனந்த அரண்மனை மனசுக்குள் மத்தாப்பூ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமானவர். 1990 ம் ஆண்டு இயக்குநர் பிரியதர்ஷனை காதலித்து கரம் பிடித்தார். இருவருக்கும் ஒரு மகன், மகள் இருக்கின்றனர். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இத்தம்பதியினர் பிரிந்து வாழ்கின்றனர்.

லிஸியின் தந்தை

இந்நிலையில் கணவரைப் பிரிந்து வாழும் லிஸிக்கு தற்போது மற்றொரு சோதனை ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் முவாற்றுபுழாவை சேர்ந்த வர்க்கி தான் லிஸியின் தந்தை என்றும்,வயதான காலத்தில் லிஸி தன்னை கவனிக்காமல் விட்டுவிட்டதாகவும் லிஸியின் மேல் குற்றம் சாட்டினார். மேலும் மாதம்தோறும் அவர் தனக்கு பண உதவி செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் ஆர்.டி.ஓ.விடம் மனு கொடுத்தார். இந்த மனுவின் அடிப்படையில் வர்க்கிக்கு மாதந்தோறும் லிஸி ரூ.5,500 கொடுக்க ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.

தொடர்ந்து சோதனை

ஆனால் ஆர்.டி.ஓவின் இந்த உத்தரவை லிசி ஏற்கவில்லை. வர்க்கி எனது தந்தை இல்லை என்று ஆர்.டி.ஓ. உத்தரவை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதிமன்றம் வர்க்கிக்கு, லிஸி பணம் கொடுக்க வேண்டும் என்பதை உறுதிபடுத்தி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து டிவிஷன் பெஞ்சில் லிஸி முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி தனது தீர்ப்பில் வர்க்கிக்கு லிசி மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டார். இதனை ஏற்காத லிஸி வர்க்கி எனது தந்தையே இல்லை என்று மீண்டும் மனு தாக்கல் செய்தார்.

டி.என்.ஏ பரிசோதனை

இதைத் தொடர்ந்து வர்க்கி கேரள ஐகோர்ட்டில் லிஸி எனது மகள்தான். இதனை ஏற்க அவர் மறுப்பதால் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இதற்கு லிஸி விளக்கம் அளிக்கும்படி நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். வழக்கு விசாரணை வருகிற 19-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்படுமா? என்பது அப்போது தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Kerala High Court Issued Notice to Actress Lissy, and has been Asked to Submit DNA test Also.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil