»   »  கேரளா வயநாட்டில் முதல் திரைப்படக் கல்லூரி!

கேரளா வயநாட்டில் முதல் திரைப்படக் கல்லூரி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் உள்ள தேக்குமித்தலா அருகே நிறுவப்பட்டுள்ள மாநிலத்தின் முதல் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொழில்நுட்பக் கல்லூரியை, குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

திங்கள்கிழமை நடைபெற்ற கல்லூரியின் தொடக்க விழாவில் அன்சாரி பேசியதாவது:

எதிர்காலக் கலைஞர்களை உருவாக்கும் நோக்கில், சர்வதேசத் தரத்திலான திரைப்படக் கல்லூரிகளை நிறுவுவது அவசியமாகும்.

Kerala's first film institute launched

அழகியல் சார்ந்த படைப்பாற்றல், சமூக விழிப்புணர்வு ஆகியவற்றோடு, திரைப்படம், விடியோ படம் ஆகியவற்றைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத் திறன்களையும் அந்தக் கல்லூரிகள் கற்றுத் தர வேண்டும். இந்த நோக்கத்துடன் குடியரசு முன்னாள் தலைவர் கே.ஆர்.நாராயணன் பெயரில் கேரள அரசு திரைப்படக் கல்லூரி தொடங்கியுள்ளது பாராட்டத்தக்கது.

அரசியல், சமூக ரீதியிலான கருத்துக்களைக் கூறும் வலுவான ஊடகமாக திரைப்படங்கள் உள்ளன. பொழுதுபோக்கு சார்ந்த பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்தாலும், அர்த்தமுள்ள, கலைத்திறன் சார்ந்த திரைப்படங்கள் சிறப்பிடம் பெறுகின்றன.

சிறந்த திரைப்படங்களைப் பாராட்டும் தன்மை உள்ளவர்களாக கேரள மக்கள் திகழ்கின்றனர்," என்றார்.

English summary
The first film institue of Kerala has been inaugurated on Monday by vice president Hameed Ansari.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil