»   »  பாவனா மாதிரி இனி யாரும் பாதிக்காமல் இருக்க கேரளா எடுத்த அதிரடி நடவடிக்கை!

பாவனா மாதிரி இனி யாரும் பாதிக்காமல் இருக்க கேரளா எடுத்த அதிரடி நடவடிக்கை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மலையாள சினிமா உலகையே சமீபத்தில் அதிர வைத்த சம்பவம் என்றால் அது பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம்தான்.

இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்க கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

திரைத்துறையில் பணியாற்றும் பெண்கள் தினசரி சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி ஆய்வு நடத்த மூன்று பேர் கொண்ட கமிட்டியை கேரள அரசு நியமித்துள்ளது.

Kerala set up committee to curb sexual atrocities against women in film industry

கேரள முதல்வர் பினராயி விஜயன் முன்னிலையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், 'திரைத்துறையில் பணியாற்றும் பெண்கள், பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். இது பற்றி ஆய்வு செய்து, தீர்வு காண வேண்டும்' என, கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதற்காக மூன்று பேர் கொண்ட கமிட்டி ஒன்றை உருவாக்க அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து, கேரள ஐகோர்ட் முன்னாள் நீதிபதி ஹேமா தலைமையில், மூன்று பேர் அடங்கிய கமிட்டியை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த கமிட்டியில், பழம்பெரும் நடிகை சாரதா, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி கே.வி.வல்சாலாகுமாரி ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெறவும், ஒப்புதல் வழங்கப்பபட்டது.

திரைத்துறையில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு எடுத்து இக்குழு அரசுக்கு தெரிவிக்கும். மேலும் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இக்கமிட்டி பரிந்துரை செய்யும். அதன் அடிப்படையில் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

English summary
The Kerala Govt has set up a high level committee to suggest action against sexual atrocities against women in film industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil