»   »  'தெறி' கெட்ட வார்தையாமே? கவலையில் மலையாள ரசிகர்கள்

'தெறி' கெட்ட வார்தையாமே? கவலையில் மலையாள ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இப்ப எல்லாம் சினிமாவில கதைக்கு கூட யோசிக்கிறதில்லை. படத்துக்கு பேர் வைக்கத்தான் ரூம் போட்டு யோசிக்கிறாங்க. பேரை சொல்லவே மாசக்கணக்குல காத்திருக்கிற வைக்கிற இயக்குநர்கள், பேரை சொன்னப்பிறகுதான் பல பிரச்சினைகளை சந்திக்கிறாங்க.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் 59வது படத்துக்கு 'தெறி'ன்னு வச்சாலும் வச்சாங்க... பயபுள்ளைங்க டுவிட்டர்ல கமெண்ட் பின்னி எடுக்கறாங்க. பாத்தாலே கண்ல ரத்தம்தான் வருது. ஏன்? ஏன்டா இப்படி படத்தோட பேரைத்தானே சொன்னோம் பர்ஸ்ட் லுக் போட்டதுக்கே இப்படியா? என்று யோசிக்க ஆரம்பித்து விட்டது விஜய்.


அந்த கவலையை விட பெறும் கவலையாக இருக்கிறது இப்போது கேள்விப்பட்டிருக்கும் செய்தி. தெறி என்கிற வார்த்தையே கெட்ட வார்த்தையாம். தமிழில் ஒருவழியாக இந்த படத்தின் தலைப்பை ஏற்றுக்கொண்டாலும், மலையாளத்தில் இந்த படத்தின் தலைப்பை கேரளா ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்ளவார்கள் என்ற கவலைதான் இப்போது விஜய் தரப்பை பிடித்து ஆட்டுகிறது.


மலையாள ரசிகர்கள்

மலையாள ரசிகர்கள்

நடிகர் விஜய்க்கு மலையாளத்தில் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தலைவா படத்திலேயே இது கண்கூடாக தெரிந்தது. ஜில்லா படத்திற்கு கேரளாவில் பிரம்மாண்ட விளம்பரங்கள் எல்லாம் செய்யப்பட்டது.


தெறிக்க விடும் தெறி

தெறிக்க விடும் தெறி

விஜய் நடித்த 59வது படத்திற்கு தெறி' என்ற டைட்டில் நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டதும் தமிழகத்தில் உள்ள விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்த அதே நேரத்தில் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் கடும் அப்செட்டில் இருக்கின்றார்களாம்.


கெட்ட வார்த்தையாமே

கெட்ட வார்த்தையாமே

கேரளாவில் மலையாள சூப்பர் ஸ்டார்களின் படங்களுக்கு இணையாக விஜய்யின் ஒவ்வொரு படமும் கேரளாவில் சூப்பர் ஹிட் ஆகும். இந்நிலையில் ஒரு கெட்ட வார்த்தை விஜய்யின் படத்திற்கு டைட்டிலா? என கேரள விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.


தலைப்பு மாறுமா?

தலைப்பு மாறுமா?

நடிகர் விஜய் இந்த படத்தின் தலைப்பை உடனடியாக மாற்ற வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் வலியுறுத்தி வருகின்றனர். கேரள ரசிகர்களின் வேண்டுகோளை அடுத்து விஜய் தனது படத்தின் தலைப்பை மாற்றுவாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.


English summary
Actor Vijay's Kerala state fans worry about the 59th movie name Theri.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil