1000 கோடி கிளப்பில் இணைந்தது கேஜிஎஃப் 2... இன்று மற்றொரு சாதனை காத்திருக்காம்
சென்னை : கன்னட ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்த கேஜிஎஃப் சாப்டர் 2 படம் 1000 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. 1000 கோடி கிளப்பில் இணைந்த முதல் கன்னட படம் இதுவாகும். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
டைரக்டர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்த கேஜிஎஃப் முதல் பாகம் 2018 ம் ஆண்டு ரிலீசானது. இந்த படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றதை தொடர்ந்து ஹம்பாலே ஃபிலிம்ஸ் - பிரசாந்த் நீல் கூட்டணி கேஜிஎஃப் 2 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினர். இந்த படம் ஏப்ரல் 14 ம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது.

கேஜிஎஃப் வசூல் சாதனை
பான் இந்தியன் படமாக 5 மொழிகளில் வெளியிடப்பட்ட இந்த படம் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரிடமும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. ரிலீசான முதல் நாள் துவங்கி, தற்போது வரை பல மெகா பட்ஜெட் படங்களின் வசூல் சாதனையை கேஜிஎஃப் 2 முறியடித்து வருகிறது. இரண்டாவது வாரத்தில் மட்டும் 203 கோடிகளை இந்த படம் வசூல் செய்துள்ளது.

1000 கோடி கிளப்பில் கேஜிஎஃப் 2
ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படம் ரிலீசான 15 நாட்களில் 1000 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. இந்த சாதனையை கேஜிஎஃப் 2 முறியடிக்குமா என அனைவராலும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேஜிஎஃப் 2 படமும் 15 நாட்களில் 1000 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இந்தியாவில் மட்டும் இதுவரை 826 கோடிகளை கேஜிஎஃப் 2 வசூல் செய்துள்ளது.

இதுவரை எத்தனை கோடி வசூல்
நேற்றோடு 1006 கோடிகளை உலகம் முழுவதிலும் கேஜிஎஃப் 2 படம் வசூல் செய்துள்ளது. இதுவரை 1000 கோடி கிளப்பில் 3 இந்திய படங்கள் மட்டுமே இணைந்திருந்த நிலையில் நான்காவது படமாக கேஜிஎஃப் 2 இதில் இணைந்துள்ளது. பல மொழிகளில் பல படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தாலும் அவை அனைத்தையும் தாண்டி கேஜிஎஃப் 2 தொடர்ந்து வசூலை வாரி குவித்து வருவது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
வார இறுதி நாட்கள், ரம்ஜான் விடுமுறை என அடுத்தடுத்து விடுமுறைகள் வருவதால் கேஜிஎஃப் 2 படத்தின் வசூல் வரும் வாரங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கேஜிஎஃப் 3 படத்தை வேறு இயக்க போவதாக படக்குழு கூறி வருவதால் கேஜிஎஃப் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

டங்கள் வசூல் நெருங்கும் கேஜிஎஃப் 2
ரிலீசான முதல் வாரத்தில் 623 கோடிகளை வசூல் செய்துள்ளது கேஜிஎஃப் 2. அதிலும் சனிக்கிழமையில் 46 கோடியையும், ஞாயிற்றுக்கிழமையில் 55 கோடியையும் வசூல் செய்தது. வட இந்தியாவில் மட்டும் இதுவரை 400 கோடிக்கும் மேல் கேஜிஎஃப் 2 வசூல் பார்த்துள்ளது. அமீர் கானின் டங்கள் படத்தின் வசூலை கேஜிஎஃப் 2 நெருங்கி வருகிறது. அதே சமயம் பாகுபலி 2 வசூலை விட குறைவான தொகையையே கேஜிஎஃப் 2 பெற்றுள்ளது.
Recommended Video

இன்று இன்னொரு சாதனை காத்திருக்கு
மற்றொரு புதிய சாதனையாக இன்று கர்நாடகாவில் மட்டும் 150 கோடி வசூல் செய்த சாதனையை கேஜிஎஃப் 2 படைக்க உள்ளது. இதுவரை 149.50 கோடிகளை கர்நாடகாவில் வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் 82 கோடிகளையும், கேரளாவில் 53.75 கோடிகளையும் பெற்றுள்ளது. ஆந்திராவில் 137.50 கோடிகளை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











