twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேஜிஎஃப் பட பிரபலம் நடிகர் கிருஷ்ணா ஜி ராவ் காலமானார்... அதிர்ச்சியில் கன்னட திரையுலகம்!

    |

    பெங்களூரு: கன்னடத்தில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.
    யாஷ் ஹீரோவாக நடித்த இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    இந்நிலையில், கேஜிஎஃப் படத்தில் நடித்து பிரபலமான கிருஷ்ணா ஜி ராவ் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஒன்லி பீஸ்ன்னு சொல்லிய கேஜிஎஃப் 2வையே ஓரங்கட்டிய காந்தாரா.. அதிக வசூல் சாத்தியமானது எப்படி? ஒன்லி பீஸ்ன்னு சொல்லிய கேஜிஎஃப் 2வையே ஓரங்கட்டிய காந்தாரா.. அதிக வசூல் சாத்தியமானது எப்படி?

     கேஜிஎஃப் ஆடிய ருத்ரதாண்டவம்

    கேஜிஎஃப் ஆடிய ருத்ரதாண்டவம்

    கன்னட திரையுலகை உலகமே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் கேஜிஎஃப். பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படம், உலகம் முழுவதும் மாஸ் ஹிட் அடித்தது. ஆக்சன் ஜானரில் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவான கேஜிஎஃப், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் பார்வையற்ற வயதானவர் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் கிருஷ்ணா ஜி ராவ். கன்னட திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ள அனைவராலும் அறியப்பட்டார்.

     திடீரென உயிரிழப்பு

    திடீரென உயிரிழப்பு

    கன்னட திரைத்துறையில் நீண்ட வருடங்களாக துணை நடிகராக வலம் வந்த கிருஷ்ணா ஜி ராவ், சமீபத்தில் தெலுங்கில் கிருஷ்ணா குமார் இயக்கத்தில் வெளியான 'நானோ நாராயணப்பா' என்ற படத்தின் மூலம் முன்னணி நடிகராகவும் உருவெடுத்தார். காமெடி ஜானரில் உருவான இந்தப் படத்தில் கிருஷ்ணா ஜி ராவின் நடிப்பு பலரின் பாராட்டையும் பெற்றது. இந்நிலையில், கிருஷ்ணா ஜி ரா வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

     திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்

    திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்

    கே.ஜி.எஃப் முதல் பாகத்தில் கண் பார்வை தெரியாத முதியவர் கேரக்டரில் கிருஷ்ணா ஜி ராவ் நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் "உங்களுக்கு ஒரு யோசனை சொல்றேன். நீங்க மட்டும் அவன் குறுக்க போய்டாதீங்க சார்" என்று இவர் பேசிய வசனம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்த வசனம் இப்போது பல மீம்ஸ்கள் மூலமும் வைரலாகி வருகிறது. இந்நிலையில், தற்போது கிருஷ்ணா ஜி ராவ் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கன்னட திரையுலகினரும் ரசிகர்களும் கிருஷ்ணா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

     மூச்சு விடுவதில் சிரமம்

    மூச்சு விடுவதில் சிரமம்

    உயிரிழந்த கிருஷ்ணா ஜி ராவ்க்கு, வயது மூப்பின் காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், சில நாட்களாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் கிருஷ்ணா சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும், சிகிச்சை பலனில்லாமல் கிருஷ்ணா ஜி ராவ் உயிரிழந்தது கன்னட திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Actor Krishna G Rao is famous for the movie KGF directed by Prashant Neel. He died of old age. The film fraternity and fans have mourned the demise of Krishna G Rao.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X